Header Ads



கல்முனை கரைவலை தோணிகளுக்கு, பிடிபட்ட அதிகளவான பாறைக்குட்டிகள் (படங்கள்)


(எம் . என். எம். அப்ராஸ்)

அம்பாறை மாவட்டம் கல்முனை  கடற்பரப்பில் கரைவலை தோணிகளுக்கு அதிகளவான  பாறைக்குட்டி வகைஇன மீன்கள்  (26) அதிகளவில் பிடிக்கப்பட்டன.

கடந்த சில நாட்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக  இப் பகுதியில்  கரைவலை   தோணிகளுக்கு மீன்பிடியானது   மிகவும்  குறைந்த  நிலையில் காணப்பட்டதுடன் நீணட நாட்களின் பின்னர்கரைவலை மீனவர்களுக்கு  இவ் வகை  மீன்கள் இன்றைய தினம் அதிகளவில் பிடிக்கப்பட்டது இதனால்  மீனவர்கள் மகிழ்ச்சி நிலையில் காணப்பட்டனர்.

இதேவேளை  குறித்த மீன்பிடி நடவடிக்கையின் போது  மீன்பிடி   கடலில் காணப்படும் ஒரு வகைகடற்பாசிகள் மீனவர்களின் வலைக்குள் அதிகமாக மீன்களுடன் அகப்பட்டதனால் குறித்த   கடற்பாசியினை  அகற்றும் செயற்பாட்டில்  மீனவர்கள் ஈடுபட்டனர் இதனால் மீனவர்கள் சிரமத்தை எதிர் நோக்கியதைஅவதானிக்க முடிந்தது.

 குறித்த மீன்கள் உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ 300 ருபாவிற்கு  விற்பனையாவதுடன்  மேலதிக மீனகள் வெளி மாவட்டங்களுக்கும்   விற்பனைக்காக குளிரூட்டி வாகனம் மூலம்   அனுப்பிவைக்கப்படுகின்ற இதேவேளை  மேலும் இப் பிரதேசத்தில்  மீன்கள்க ருவாட்டுக்காய்பதனிடப்படுகின்றமை  குறிப்பிட்டத்தக்கது .





No comments

Powered by Blogger.