Header Ads



சீமெந்து, கோதுமை மா ஆகியவற்றின் விலைகளும் அதிகரிப்பு


சீமெந்து மற்றும் கோதுமை மா என்பவற்றின் புதிய விலைகள் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளன.

முன்னதாக, 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்க வேண்டுமென சீமெந்து விநியோகஸ்தர்கள் கோரியிருந்தனர்.

எனினும், 100 ரூபாயினால் மாத்திரம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்திருந்தார்.

இதற்கமைய 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலையை 97 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 முதல் 12 ரூபாய் வரையில் அதிகரிக்கப்படவுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

2

கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன் பிரகாரம் ஒருகிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அச்சங்கம் தீர்மானித்துள்ளது.

இதனால் கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் சகல தின்பண்டங்களின் விலைகளும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளனவென தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.