Header Ads



உள்நாட்டில் ஒருங்கிணைக்கப்பட்ட வாகனங்கள் சந்தைக்கு அறிமுகம்


30 சதவீதமான உள்ளூர் பெறுமதியுடன், முதல் முறையாக உள்நாட்டில் ஒருங்கிணைக்கப்பட்ட ஜீப் ரக வாகனம் ஒன்று சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மத்துகம - வெலிபன்ன பகுதியில் உள்ள வாகன ஒருங்கிணைப்பு மையத்தில், கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையில் நேற்று (26) இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நிலையான இயக்க நடைமுறைகள் எனப்படும் எஸ்.ஓ.பி முறைமை அறிமுகத்துடன், இலங்கையில் வாகன ஒருங்கிணைப்பு கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தங்களது உள்ளூர் பெறுமதி சேர்ப்பை அதிகரித்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, 'மேட் இன் ஸ்ரீலங்கா' என்ற வர்த்தக நாமத்தைக் கொண்ட வாகனங்கள், வீதிகளில் பயணிக்கும் எதிர்காலத்தை நோக்கி தடம் பதிக்க முடியும் எனத் தாம் நம்பிக்கை கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 




No comments

Powered by Blogger.