Header Ads



அரசாங்கத்துக்குள் அமர்ந்துள்ள நாடகக்காரர்கள் பற்றி எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும்


அரசாங்கத்துக்குள் அமர்ந்துள்ள நாடகக்காரர்கள் தயக்கம் காட்டினாலும் எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமையை வீழ்ச்சியடையச் செய்வதற்கு அரசாங்கத்துக்குள் மற்றுமொரு குழுவின் சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக ஆளும் கட்சியின் பின்வரிசை எம்.பியான பிரமித பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க அரசியல் கட்சிகளில் ஏற்பட்டுள்ள பிளவுகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தி, அரசாங்கத்தில் கிளர்ச்சிக் குழுக்கள் இருப்பதாக தெரிவித்த போதிலும் அவை கிளர்ச்சிக் குழுக்களல்ல மாறாக நாடகத்தனமான செயற்பாடுகள் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடகக் கலைஞர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நாடகம் ஒன்றை முன்வைப்பதாகவும், இவ்வாறான நாடகங்களை அரசாங்கத்தில் தொடர அனுமதிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டிய அவர், அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தில் இடமில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டைக் கட்டியெழுப்ப முன்வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்புள்ளை இப்பன்கடுவ பிரதேசத்தில் விஷமில்லா உணவு விற்பனை நிலையத்தை திறந்து வைத்து விவசாயிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.