Header Ads



வரலாற்றில் முதற்தடவையாக நாட்டின் தலைவரான ஜனாதிபதியின் செலவுகள் பாரியளவு குறைக்கப்படும் பட்ஜட்


வரலாற்றில் முதற்தடவையாக நாட்டின் தலைவரான ஜனாதிபதியின் செலவுகள் பாரியளவு குறைக்கப்படும் ஒரு வரவு செலுத்திட்டமாக அடுத்தாண்டு வரவு- செலவுத்திட்டம் அமையவுள்ளதென அமைச்சரும் அமைச்சரவைபேச்சாளருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (6) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை

அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், மக்கள் எதிர்பார்க்கும் வகையில் ஜனாதிபதி தனது வரவு செலவுத்திட்டத்தை நிர்வகித்து, அரச பொறிமுறைக்குள் பாரிய முன்மாதிரியை ஏற்படுத்தினாலும் அரச பொறிமுறைகள் மக்கள் உணரும் வகையில் இல்லை என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், இந்த சிக்கன நடவடிக்கையானது, சிறந்த முன்னுதாரணம் என தெரிவித்த அவர், அரச பொறிமுறைக்குள் உள்ள மக்கள் பிரதிநிதிகளில் உள்ளூராட்சி மன்றங்கள் தொடக்கம் பாராளுமன்றம் அமைச்சரவை வரை, அந்த கொள்கையை மதிக்காமல் அல்லது மீறி பொறுப்பற்ற முறையில் பொதுமக்களின் பணம், வரியை முறைகேடாகப் பயன்படுத்துவார்களாயின் அது தொடர்பில் அச்சமின்றி கேள்வி எழுப்பலாம் என்றார்.

சில சம்பவங்கள் தொடர்பில் பொது நிகழ்வுகளில் கலந்துரையாடுவதற்கு பதிலாக அந்த

சம்பவங்களை அடையாளம் கண்டு, கையாள்வது முக்கியமான விடயம் என்றார்.

அதற்கமைய, அரசாங்க அதிகாரி அல்லது மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பற்ற விதத்தில் மக்களின் பணத்தை முறைகேடாக பயன்படுத்த எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என தெரிவித்த அவர், அவ்வாறான எந்தவொரு நபரையும் அரசாங்கம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காது என்றார்.

1 comment:

  1. சனாதிபதி சிக்கனமாக வாழ்கின்றார்.எனவே பொது மக்களாகிய நாம் சந்தையில் உணவுப் பொருட்கள் இல்லாவிட்டால் சிக்கனமாக பசியுடனும் தாகத்துடனும் வாழப் பழகுவோம்.

    ReplyDelete

Powered by Blogger.