Header Ads



தொலைபேசி இலக்கங்களை மாற்றாது, வலையமைப்பினை மாற்ற அனுமதி


தொலைபேசி இலக்கங்களை மாற்றாது வலையமைப்பினை மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தொலைபேசி வாடிக்கையாளர்கள் தமது தொலைபேசி இலக்கத்தை மாற்றாது அதே இலக்கத்திற்கு வேறும் ஓர் வலையமைப்பிற்கு மாறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய நியதியின் கீழ் எந்தவொரு தொலைபேசி வாடிக்கையாளருக்குத் தேவையான இலக்கங்களை மாற்றாது வேறும் ஓர் வலையமைப்பில் அதே இலக்கத்தில் சிம் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  

No comments

Powered by Blogger.