October 07, 2021

போத்தலில் சிறுநீர் கழிக்கும் றிசாத் - பாராளுமன்றத்தில் கிரியெல்ல சுட்டிக்காட்டு


முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன், மாலை 5 மணிக்குப் பின்னர், போத்தலில் சிறுநீர் கழிக்கவேண்டியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியினர் பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ரிஷாட் பதியூதீன் எம்.பி, மாலை 5 மணிக்குப் பின்னர் மலசலக்கூடத்துக்குச் செல்லமுடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அதனால், அவர் ​போத்தலிலே சிறுநீர் கழிக்கின்றார்.  ஆகையால், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாப்பதற்க வழிவகைகளைச் செய்யுமாறு சபாநாயகரிடம் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிநின்றார்.

இதனிடையே குறுக்கிட்ட அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, கடந்தகாலங்களில் தாங்களும் சிறையில் அடைக்கப்பட்டோம். அப்​​போதும் மாலை 5 மணிக்குப் பின்னர், போத்தல்களிலே சிறுநீர் கழித்தோம் என்றார். 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியூதீன் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

0 கருத்துரைகள்:

Post a Comment