October 26, 2021

தன்னம்பிக்கையால் உயர்ந்த முஸ்தஃபா


ஆறாம் வகுப்பில் தோல்வியடைந்த பிறகு தனது தந்தையுடன் கூலி வேலை செய்யத் துவங்கிய கேரள மாநிலம் வயநாட்டு சிறுவன் தன்னம்பிக்கை ஒன்று மட்டும் மூலதனமாக வைத்து 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள உலகின் மிகப்பெரிய இட்லி உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளராக உருவெடுத்த கதை..

ஒருவேளை ஆயிரம் MOTIVATION வகுப்புகளை கேட்பதை விட இது பயனதரும்...

இது கதை அல்ல.. வரலாறு ...

இந்தக் கதையின் கதாநாயகன் தான் ID ஃப்ரெஷ் உணவின் (iD Fresh Food) நிறுவனர் PC. முஸ்தபா. (Musthafa P C)

அவரது மிகப்பெரிய சிறப்பு என்னவெனில் நேர்மைக்கு அவர் அளிக்கும் மதிப்பாகும்...

வியாபாரத்தில் வட்டியோ அல்லது ஹறாமானவைகளோ (மார்க்கத்தில் தடுக்கப்பட்டவைகள்) நுழைந்து விடக்கூடாது  என்ற நிர்பந்தம் காரணமாக  லட்சக்கணக்கான ரூபாய் சலுகைகளை நிராகரித்த கடந்த கால  வரலாறுகள் உண்டு அவருக்கு...

ஆனால் அந்நேரத்திலும் கூட அவரது மனதில் ஒரு உறுதி இருந்தது...

சாதாரண ஒரு உணவு!!! தயாரிப்பு உலகின் மிகப்பெரிய பிராண்டுகளில் ஒன்றாக மாறும்.

ஆறாம் வகுப்பில் ஏற்பட்ட தோல்வி என்னை தினமும்  வேலைக்கு அழைத்துச் சென்றது, தினக்கூலி 10 ரூபாய்.

எனது தந்தையுடன் வேலை செய்யும் போது எனது நண்பர்கள் பள்ளிக்கு செல்வதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன்.

அது எனக்கு ஒருபோதும் ஒரு மனவலியாக தெரியவில்லை..

ஏனென்றால் வீட்டிலுள்ளவர்களுக்கு

மூன்று வேளை உணவு கிடைப்பது பெரிய விஷயமாக இருந்தது, பசியை எதிர்த்து தான் போராட வேண்டும் என்று எனக்கு நன்றாக தெரியும், அதற்காக நான் என்னை பக்குவப்படுத்திக் கொண்டேன்..

ஆம்!!! ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு பெறுவது தான் முக்கியம்."

இப்படியிருக்க ஒரு நாள் என் பள்ளி ஆசிரியர்கள் என்னைத் தேடி வந்தனர், அவர்கள் என்னை மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர், எனது படிப்பின்  மொத்த செலவையும் கணித ஆசிரியரே ஏற்றார்.

விடா முயற்சியுடன் படிக்க ஆரம்பித்தேன்..  பள்ளியில்  பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் முதல் மாணவனாக  தேர்ச்சி பெற்றேன், அதன் பிறகு நான் கல்லூரிக்குச் சென்றேன், அதற்கும் அந்த கணித ஆசிரியரே உதவினார்.

கல்லூரி முடிந்ததும்  வேலைக்குச் சென்றேன், முதல் சம்பளம் ரூ. 14,000/= த்தை நான் என் தந்தையிடம் கொடுத்தபோது அவர் அழுது கொண்டிருந்தார்.

அவர் தனது வாழ்நாள் முழுவதும் வேலை செய்த போதும் இவ்வளவு பணத்தை பார்த்ததில்லை. 

படிப்படியாக நான் வேலையில் உயர்வைடைந்தேன், இந்நிலையில் வெளிநாட்டுக்கு சென்றேன்..

குடும்பத்திற்கு இருந்த ரூ. 2 லட்சம் கடனை நான் 2 மாதத்தில் அடைத்தேன்.

இரண்டு வருடங்கள் கழித்து நாங்கள் ஒரு வீடு வாங்கினோம், அந்த நாளின் மகிழ்ச்சி வார்த்தையால்  சொல்வதற்கு அப்பாற்பட்டது...

வேலையெல்லாம் நன்றாக போய் கொண்டு இருந்தாலும் ஏதோ ஒரு கவலை இருந்து கொண்டே இருந்தது...

இன்னும் முன்னேற வேண்டும்...

வேலையுடன் ஒரு சிறு வணிகத்தைப் பற்றி சிந்திக்க...

தோசை மாவு விற்பனை செய்யும் வியாபாரத்தை துவங்கினால் நல்ல முறையில் செய்யலாம் என்று புரிந்து கொண்டேன்..

என் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் உதவியுடன், நான் தோசை மாவை பேக் செய்து விற்க ஆரம்பித்தேன்.

உற்பத்தி மிகவும் சிறிய அறையில் இருந்தது. 

இந்த பிராண்டிற்கு ஐடி ஃப்ரெஷ் தோசை  மாவு என்று பெயர் வைத்தோம் ..

ஒன்பது மாதங்கள் ஆனது.  தினமும் 100 பாக்கெட் மாவை விற்க... இதற்கிடையில்  நிறைய நஷ்டமும் ஏற்பட்டது, ஆனால் அது என்னைத் தளர்த்தி விடவில்லை...

நான் வேலையிலிருந்து  ராஜினாமா செய்தேன், முழுநேரத்தையும் நிறுவனத்தில் செலவழித்தேன்...

25 ஊழியர்கள் இருந்தனர். என்னால் அவர்களுக்கு ஒழுங்காக பணம் கொடுக்க முடியவில்லை.

ஆனால் நான் அவர்கள் அனைவரிடமும் கூறினேன்.

"நான் உங்களை ஒரு நாள் கோடீஸ்வரனாக்கப் போகிறேன்." 

இதைகேட்டு அவர்கள் அனைவரும் கை கொட்டி சிரித்தனர்..

25 ஊழியர்களுக்கும் எனது நிறுவனப் பங்குகளை வழங்கினேன்.

8 வருட ஏற்ற தாழ்வுகளுக்கு பிறகு எங்களுக்கு ஒரு முதலீட்டாளர் கிடைத்தார்.

அவர் எனது நிறுவனத்தில் ரூ. 200 கோடி முதலீடு செய்தார், என்னுடன் இருந்த அந்த 25 ஊழியர்களும்  கோடீஸ்வரர்கள் ஆனார்கள்.

என்னுடைய இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள என்னை செதுக்கிய, உருவாக்கிய, கணித ஆசிரியரைப் பார்க்கச் சென்றேன்.

ஆனால் என் மகிழ்ச்சியை நான் ஆசிரியரிடம் சொல்வதற்கு முன்பே, அவர்கள் இவ்வுலகிற்கு  விடை சொல்லியிருந்தார்கள்

நான் மிகவும் சோகமடைந்தேன்..

நான் எப்போதும் எல்லா இடங்களிலும் அந்த ஆசிரியரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.

ஆம்!! அவர்கள் என்னை உருவாக்கிய ஆசான்.

பெற்றோர்களை மதித்து, தன்னம்பிக்கையுடன் நேர்மையாக பயணிப்பவர்கள் எப்போதும் வழிதவற மாட்டார்கள்.

2018 இல், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேச எனக்கு அழைப்பு வந்தது. 

நான் முதலில் சொல்லத் தொடங்கியது எனக்கு கணிதம் கற்பித்த ஆசிரியரைப் பற்றி, பிறகு என் அப்பாவைக் குறித்து  பேசினேன்.

என்னை முன்னோக்கி வழிநடத்தியவர்கள் இவர்கள் இருவரும் தான், தந்தை இன்னும் பண்ணையில் வேலைப்பார்த்து கொண்டு இருக்கிறார்..

கீழ்வரும் வரிகளைத்தான் நான் ஹார்வர்டில் கடைசியாக பேசி முற்றுப்புள்ளி வைத்தேன்...

நீங்கள் கடினமாக உழைத்தால், ஒரு தொழிலாளியின் மகன் கூட ஒரு மில்லியன் டாலர் நிறுவனத்தை உருவாக்க முடியும்.

அவர் அங்கு நிற்கவில்லை .. ஐக்கிய நாடுகள் சபையிலும்  தனது இட்லி, வடை மற்றும் அதன் மூலம் வாழ்வில் உயர்வடைந்த வழிகள் பற்றியும் பேசினார்.

www.idfreshfood.com

https://en.m.wikipedia.org/wiki/ID_Fresh_Food

Aazath Atham Lebbe

1 கருத்துரைகள்:

Post a Comment