Header Ads



அதிகாலை ஒரு மணி முதல், நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்


கொவிட் தொற்றிற்கு மத்தியில் ஒரு மாத காலமாக மூடப்பட்டிருந்த வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை பிரிவு  கடந்த11 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று பாரியளவிலான மக்கள் குவிந்திருந்ததனை அவதானிக்க முடிந்தததாக செய்தி வெளியாகியுள்ளது.

இவர்கள் நேற்று அதிகாலை ஒரு மணி முதல் வெளிவிவகார அமைச்சிற்கு அருகில் நிற்பதாக தெரியவந்துள்ளது. அங்கிருந்தவர்களில் அதிகமானோர் இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் அங்கு வருகைத்தந்திருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. Twin

2 comments:

  1. சில தினங்களுக்கும் முன் நானும் எனது மகளும் 5 மணி நேரம் காத்திருந்து certificate attestation செய்து முடித்து வீடு வந்து சேர்ந்தோம்.முக்கியமான விடயம் என்னவென்றால், பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தின்  ஒன்லைனில் விண்ணப்பித்ததும், வெளிவிவகார அமைச்சிலிருந்து குறுந்தகவல் வந்தது, உங்கள் சான்றிதழ் அச்சிடப்பட்டுள்ளது இந்த code ஐ காண்பித்து collect பண்ணவும் என்று......
    அங்கு சென்று 5 மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டியேட்பட்டது....தாங்க முடியாத வெயில், பின்பு சிறு மழை, எல்லாவற்றுக்கும் வீதியில்தான் நின்று கொண்டிருக்க வேண்டி இருந்தது.......

    ReplyDelete
  2. இந்த இளைஞர்கள் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையை நன்கு அறிந்தவர்கள். அடுத்த நகர்வு பற்றிய தீர்மானத்துடன் அங்கு வந்திருக்கின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.