Header Ads



மௌலவிமார்களுடன் கலந்துரையாடி புரியாணி உண்ட, ஆணைக்குழு தொடர்பில் எமக்கு பிரச்சினை உள்ளது - தயாசிறி


உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டுமாயின்  ஆணைக்குழுவில் அதற்கு தெளிவான சாட்சிகள் இருக்க வேண்டுமெனத் தெரிவித்த பத்திக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஆணைக்குழுவில் தெளிவான சாட்சி எதுவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இல்லை.

அவரவர்  தேவைக்கேற்ப எவரையும் உள்ளே போட முடியாது என்றார். ஆனால், அவருக்கு எதிராக வழக்கு தொடர முடியுமா? என ஆராயுமாறு ஆணைக்குழு அறிக்கையில் உள்ளது என்றார். அதனை சட்டமா அதிபர் திணைக்களம் தேடியறிய வேண்டும்.

அதைவிடுத்து பேராயருக்கோ அல்லது வேறு எவருக்கோ தீர்மானிக்க முடியாது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இத்தாக்குதல்  சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதாக எவரும் சாட்டியளிக்கவில்லை.

ஆனால், மௌலவிமார்களுடன் கலந்துரையாடி புரியாணி உண்டவர்கள்தான் இந்த ஆணைக்குழுவில் உள்ளனர். எனவே, இந்த ஆணைக்குழுவின் தீர்மானங்கள் குறித்து எமக்கும் பிரச்சினை உள்ளது என்றார்.

No comments

Powered by Blogger.