October 01, 2021

ஈஸ்டர் தாக்­கு­தலை ஒரு சிலரே மேற்­கொண்­டார்கள், ஆனால் அனைத்து முஸ்­லிம்­களும் பழி­வாங்­கப்­பட்­டார்கள்


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் விசா­ர­ணை­களை திசை­தி­ருப்ப முயற்­சிக்­கி­றார்­களோ என சந்­தே­கிக்க வேண்­டி­யுள்­ளது. எமது நாட்டில் மீண்டும் இன மற்றும் சம­யங்­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு அமை­தி­யின்­மையை உரு­வாக்கும் முயற்சி மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. இது மிகவும் அபா­ய­க­ர­மான நிலை­மை­யாகும்.உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணை­களின் சூழ்­நி­லை­யிலே இது நடை­பெ­று­கி­றது என ஆயர் கீர்த்­தி­சி­றி­பர்­ணாந்து ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்­துள்ளார்.

அவர் தொடர்ந்தும் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கையில் இம்­மு­யற்­சிகள் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் விசா­ர­ணை­களை திசை திருப்­பு­வ­தற்­கா­கவே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என நாம் சந்­தே­கிக்­கின்றோம். நியூஸி­லாந்தில் இலங்­கை­ய­ரொ­ருவர் மேற்­கொண்ட தாக்-­கு­த­லை­ய­டுத்து அந்­நாட்டின் பிர­தமர் இலங்­கையை குற்றம் சுமத்­த­வில்லை.சிங்­கள கத்­தோ­லிக்கர் மற்றும் பெளத்­தர்­க­ளுக்­கி­டையே சிலர்­அ­மை­தி­யின்­மையை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­ப­வத்தில் பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வர்­க­ளுக்­கெ­தி­ராக நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டா­ததால் இதனை கிறிஸ்­த­வர்கள் சர்­வ­தே­சத்­துக்குக் கொண்டு செல்ல முயற்­சிப்­ப­தாக குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது. கிறிஸ்­தவ சமயம் சர்­வ­தே­சத்­துடன் தொடர்­பு­டைய சம­ய­மாகும். அர­சாங்­கத்­துக்கும் சர்­வ­தேச தொடர்­புகள் இருக்­கி­றது.

சிறி­யவோர் குழு­வொன்று உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை நடத்­தி­யது. இதனை நாம் ஏற்­க­னவே கூறி­யுள்ளோம். உயிர்த்த ஞாயிறு அன்று ஹோட்­டல்கள், ஆல­யங்கள் தாக்­கப்­பட்­டன. பெரும் எண்­ணிக்­கை­யானோர் பலி­யா­னார்கள் கட்­டு­வாப்­பிட்­டியில் பலி­யா­ன­வர்­களில் முஸ்­லிம்­களும் அடங்­கி­யுள்­ளனர். கிறிஸ்­த­வர்கள் மாத்­தி­ர­மல்ல.இது சர்­வ­தேச பிரச்­சி­னை­யா­கி­யுள்­ளது.

நாம் அனை­வரும் சமய வேறு­பா­டு­க­ளின்றி ஒன்­றி­ணைய வேண்டும். இத்­தாக்­கு­த­லுக்கு அர­சாங்­கத்தின் ஒத்­து­ழைப்பு இருந்­துள்­ள­தாக மக்கள் சந்­தே­கிக்­கின்­றனர். வீடு­களில் ஒரு சிறு பிரச்­சினை ஏற்­பட்டால் கூட இரா­ணுவம், பொலிஸார் விரைவில் செயற்­பட்டு அதனைக் கண்டு பிடிக்­கி­றார்கள். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சூத்­தி­ர­தா­ரி­களை தேடிக்­கண்டு பிடிப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. அரசு இன்னும் கால அவ­காசம் தேவை என்­கி­றது.இப்­போது இரண்டு வரு­டங்கள் கடந்து விட்­டன. விரைவில் இதற்­குத்­தீர்வு தேவை.

ஜனா­தி­பதி ஐ.நா. கூட்­டத்­தொ­டரில் இது­போன்ற சம்­ப­வங்­க­ளுக்கு இனிமேல் இலங்­கையில் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது எனக் கூறி­யுள்ளார். அதற்­காக அவ­ருக்கு நாம் நன்­றி­கூற வேண்டும் என்­றாலும் அவ்­வா­றான நிலைமை இன்று இலங்­கையில் இல்லை என்­ப­தற்­காக நாம் கவ­லைப்­ப­டு­கிறோம். ஏதா­வது ஒரு சம்­பவம் அமை­தி­யின்மை ஏற்­பட்டால் அதற்­கெ­தி­ராக அரசு அல்­லது அரச அதி­கா­ரி­கள்­செ­யற்­ப­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை. அதற்கு இட­ம­ளிப்­ப­தா­கவே தெரி­கி­றது.

இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்பு நாம் இதனைக் கண்டோம். தாக்­கு­தலை ஒரு சிலரே மேற்­கொண்­டார்கள். ஆனால் அனைத்து முஸ்­லிம்­களும் பழி­வாங்­கப்­பட்­டார்கள்.

பல்­லினம், பல் சம­யங்­களைக் கொண்­டதே இலங்­கை­யாகும். நாட்டில் அனைத்து மக்­களும் ஒன்­றாக வாழ வேண்டும். இனம் சம­யங்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­ட­வேண்டாம். என நாம் அனை­வ­ரையும் வேண்­டு­கிறோம். இதனை ஜனாதிபதியும் ஐ.நாவில் உறுதிபடுத்தியுள்ளார். நாம் சமயங்களை எமது கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்துவோம்.

ஒரு இனத்தை அல்லது ஒரு மதத்தை தாக்குவது பாவமாகும். இப்பாவத்தைச் செய்யவேண்டாமென நாம் அனைவரையும் வேண்டிக்கொள்கிறோம்.

அரசியலுக்கு வருவதற்கோ அரசியல் அதிகாரத்தைக் பெற்றுக்கொள்வதற்கோ பாதுகாத்துக் கொள்வதற்கோ சமயத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றார்.-Vidivelli

0 கருத்துரைகள்:

Post a Comment