Header Ads



ஆரோக்கியமான மாணவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை, கொரோனா இன்னும் ஒரு வருடத்துக்கு நீடிக்கும் - பேராசிரியர் திஸ்ஸ


ஆரோக்கியமான பாடசாலை மாணவர்களுக்கு  கொரோனா தடுப்பூசி கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று,  பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நாட்டில் கொரோனா பிரச்சினை குறைந்தது இன்னும் ஒரு வருடத்துக்கு நீடிக்கும் என்றும், அவர் கூறியுள்ளார்.

'பல்வேறு நோய்களை உடைய மாணவர்கள், ஆரோக்கியமான மாணவர்களை அடிப்படையாக கொண்டு, சுகாதாரச் சட்டங்களை இயற்ற வேண்டும்

'சுகாதாரச் சட்டங்களை ஆராய பாடசாலை ரீதியில் குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும்' என்றும் அவர் கூறினார்.

இந்த தடுப்பூசி, வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தாது. ஆனால், அறிகுறிகள் தோன்றுவதையும் வைரஸ் தொற்றுக்குப் பிறகு இறப்பையும் தடுக்கிறது என்றார்.

மேலும், சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு, குறைந்தது 80 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றும், அவர் கூறினார்.

அத்துடன், சுகாதாரச் சட்டங்களை கடைப்பிடிக்க மக்கள் மறந்துவிடுகின்றனர். இதனால், மீண்டும் கொரோனா தொற்று தலைதூக்கும் அபாயம் உள்ளது என்றும், அவர் எச்சரித்துள்ளார்.

No comments

Powered by Blogger.