Header Ads



உயர்தரம் மற்றும் இஸ்லாமியத் துறையில், கற்க விரும்புவர்களுக்கு அரியதோர் சந்தர்ப்பம்.


உயர்கல்விக்கான பாதிஹ் நிறுவனத்திற்கு புதிய மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்

திஹாரியில் அமைந்துள்ள உயர்கல்விக்கான பாதிஹ் நிறுவனத்திற்கு 2021 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு தோற்றிய ஆண் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஐந்து வருடங்களைக் கொண்ட கற்கைநெறியின் முதலிரு வருடங்களில் உயர்தரப்பரீட்சைக்கும் மொழிக்கற்கைகளுக்கும் மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர். தொடர்ந்து இஸ்லாமியக் கற்கைகள் பீடத்தில் மூன்றுவருடங்கள் இஸ்லாமியத் துறையைக் கற்கின்றனர். அத்தோடு தகவல் தொழிநுட்பம், அரச மற்றும் அரச சார்பற்ற கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பைத் தொடர்வதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன. 

2020 உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் 94 வீதமானோரும் கலைத்துறையில் 96 வீதமானோரும் சித்திபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உணவு, தங்குமிட வசதிகள்

நவீன மயப்படுத்தப்பட்ட வகுப்பறைகள் (Multi Media Class Rooms)

விஷேட தகவல் தொழிநுட்ப கூடம்

தலைநகருக்கு அருகே அமைந்திருப்பதால் வெளிவாரிக் கற்கைகளை இலகுவாக தொடர்வதற்கான வாய்ப்புகள்

கொழும்பு - கண்டி பிரதான வீதிக்கு நெருக்கமாக அமைந்திருப்பதால் இலகுவான போக்குவரத்து வசதிகள் போன்ற மாணவர்களுக்கு உகந்த கல்விச் சூழலைக் கொண்டிருக்கின்றமை விசேட அம்சமாகும். 

பதிவு செய்து கொள்ள விரும்புவோர் பெயர், முகவரி மற்றும் சாதாரண தரப் பெறுபெற்றை பின்வரும் 076 000 8969 இலக்கத்திற்கு வட்ஸப் செய்யுங்கள்.  மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 076 2628969

விண்ணப்ப முடிவுத் திகதி  25 -10-2021.

No comments

Powered by Blogger.