Header Ads



ஈஸ்டர் தாக்குதலை அதிகாரத்திற்கு வருவதற்காக பயன்படுத்தியவர்களால், நீண்டநாள் அதிகாரத்தில் இருக்க முடியாது - மல்கம் ரஞ்சித்


உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் ஏற்பட்ட பெரும் அழிவை அதிகாரத்தை  கைப்பற்றுவதற்காக பயன்படுத்தியவர்கள் நீண்ட காலம் ஆட்சியில் நீடிக்க மாட்டார்கள் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 30 மாதங்களாவதை குறிக்கும் விதத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அது சாபக்கேடாக மாறியுள்ளது,எவரும் மகிழ்ச்சியாக வாழமுடியாத நிலை காணப்படுகின்றது பலர் வாழ்வதற்காக உழைக்க முடியாத நிலை காணப்படுகின்றதுஎன அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற காலம் முதல் இலங்கை சபிக்கப்பட்டுள்ளது போல தோன்றுகின்றதுஎவரும் மகிழ்ச்சியாக வாழமுடியாத நிலை காணப்படுகின்றது பலர் வாழ்வதற்காக உழைக்க முடியாத நிலை காணப்படுகின்றது அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆட்சி புரியமுடியாத நிலையில் உள்ளனர் என கர்தினால் மல்கம் ரஞ்சித்தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்களால் நீண்டநாள் அதிகாரத்தில் இருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகள் இடம்பெறும் விதத்தினை பார்க்கும்போது தற்போதைய ஆட்சியாளர்களிற்கும் இந்த தாக்குதலில் தொடர்புள்ளதோ என நாங்கள் சிலவேளைகளில் யோசிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்தஞாயிறு பேரழிவிற்கு பின்னால் உள்ள உண்மைகளை கண்டுபிடிப்பதற்கு நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம் தற்போது அந்த துன்பியல் நிகழ்வினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்குவதற்கு ஆண்டவனின் அருளை கோருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். Thinakkural

No comments

Powered by Blogger.