Header Ads



மனிதர்களை உட்கொள்ளும் மிக ஆபத்தான 'பிரன்ஹா' மீன் இலங்கையில் அடையாளம்


இலங்கையிலுள்ள நீர் நிலைகளில் மனிதர்களை உட்கொள்ளும் ‘பிரன்ஹா’ எனப்படும் மிக ஆபத்தான மீன் வகைகள் உள்ள தெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை வனஜீவராசிகள் திணைக்களத்தின் உற்பத்திப் பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் அஜித் குமார தெரிவித்தார்.

ஏதோ ஒரு வகையில் இந்த மீன் வகைகள் இலங்கை நீர் நிலைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதாக, மீன் வளர்ப்பு பிரிவின் மூத்த விஞ்ஞானி அஜித் குமார தெரிவித்துள்ளார்.

மனிதர்களை உட்கொள்ளும் “பிரன்ஹா” எனப்படும் மிக ஆபத்தான மீன் வகைகளே இவ்வாறு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரன்ஹா என்ற இந்த வகை மீன்கள் தியவன்னா ஓயா, களனி கங்கை மற்றும் பொல்கொட குளம் ஆகியவற்றில் கண்டறியப்பட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது.

 இந்தப் பகுதிகளில் மீன் வளர்ப்புக்கு மீன் குஞ்சுகள் விடப்பட்டபோது, இந்த வகை இனத்தைச் சேர்ந்த மீன் கலந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட மீன்கள் ஊடாக இந்த அபாயகரமான மீன்களும் இலங்கைக்குள் வந்திருக்கலாம் அல்லது வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களின் போது குறித்த மீன்கள் வந்திருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். TL



No comments

Powered by Blogger.