October 16, 2021

சுவிஸர்லாந்து வங்கிகளில் 83 இலங்கையர்களின் மறைக்கப்பட்ட சொத்து அம்பலம்


சுவிஸ் வங்கியின் ரகசியத்தன்மை பல ஆண்டுகளாகப் பேணப்பட்டு வந்தது. தற்போது சுவிஸ் அரசாங்கத்தால் அந்த ரகசியம் நீக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, சுவிஸ் வங்கிகளிலுள்ள 83 இலங்கையர்களின் வங்கிக் கணக்கு விபரங்கள் தெரியவந்துள்ளன.

சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள இரண்டு பிரதான வங்கிகளில் குறித்த கணக்கு வைப்பு இருப்பதாக ஜெனீவா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியர்களின் சுவிஸ் வங்கிக் கணக்குகள் குறித்து இந்திய அரசாங்கம் ஏற்கனவே தகவலைப் பெற்றுள்ளது.

சுவிஸ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம் குறித்த இரகசியத்தை நீக்கியுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment