October 03, 2021

அரசுக்கு கூஜா தூக்குவதை 4 Mp க்களும் நிறுத்த வேண்டும், முஸ்லிம்கள் மிகுந்த வெறுப்படைந்துள்ளார்கள் - ஹக்கீம்


(ஆர்.ராம்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசாங்கத்திற்கு தாரைவார்ப்பதற்கு விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அந்த நான்கு உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு ‘கூஜா’ தூக்கும் செயற்பாடுகளை முழுமையாக கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

வீரகேசரியின் சமகாலம் கருத்தாடற்களம் மெய்நிகர் நிழ்வில் கலந்துகொண்டு கருத்துக்களை வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,

20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு எமது கட்சியின் நான்கு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்ததன் பின்னர் அதுபற்றிய பல்வேறு பேச்சுக்களை கட்சிக்குள் நடத்தியிருந்தோம். கட்சியின் தலைமையினதும், உயர்பீடத்தினதும், போராளிகளினதும் தீர்மானத்திற்கு மாறாக செயற்படக் கூடாது என்பதை வலியுறுத்திக் கூறியிருந்தோம். அதற்கு அந்த உறுப்பினர்களும் இணக்கம் கண்டனர்.

இதனைவிடவும், பாராளுமன்றக் குழுக் கூட்டங்களின் போது கட்சிக்குள் பிளவுகள் என்ற அபிப்பிராயம் ஆதரவாளர்களுக்கும், மக்களுக்கும் சென்று குழம்பங்களை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக பாராளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்புக்களின் போது வாக்களிப்பதற்கு இணக்கமில்லாது விட்டால் ஆகக்குறைந்தது அதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு அவர்களை அறிவுறுத்தியிருந்தேன். அவர்களும் அதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார்கள்.

ஆனாலும் புதிய நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் நிதிச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டபோது அவர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள். அதுபற்றி வினவியபோது, அவரினால் ஒதுக்கீடு செய்யப்படும் அபிவிருத்தி நிதிகள் தமக்கு கிடைக்காது போய்விடும் என்ற பீதியின் காரணத்தினால் வாக்களித்ததாக கூறுகின்றார்கள்.

இந்த உறுப்பினர்கள் முதலில் அபிவிருத்தி என்ற மாயையில் இருந்து வெளிவர வேண்டும். கிழக்கு மாகாணம் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம்களும் இந்த ஆட்சியாளர்கள் மீது மிகுந்த வெறுப்படைந்துள்ளார்கள். 

அவ்விதமாக இருக்கையில் ஆட்சியாளர்களுக்கு ‘கூஜா’ தூக்குவதை எம்மவர்கள் முதலில் நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால் அவர்கள் அதற்குரிய விலையை நிச்சயம் கொடுக்க வேண்டி வரும்.

இந்த உறுப்பிர்களை அரசாங்கத்திற்கு தாரை வார்த்துவிடக்கூடாது என்பதற்காக நான் ஒழுக்காற்று நடவடிக்கை அல்லது கட்சியிலிருந்து அகற்றுதல் போன்ற கடுமையான தீர்மானங்களை இதுவரையில் எடுக்காது இருக்கின்றேன்.

ஆகவே இவர்கள் கள யதார்த்தத்தினை புரிந்து கொண்டுரூபவ் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான கட்சி என்பதை உணர்ந்து கொண்ட அதிகாரங்கள், அமைச்சுப்பதவிகளுக்கு சோரம்போகாது தற்போதுள்ள இரண்டும் கட்டாநிலையை கைவிட்டு முடிவொன்றை அவர்கள் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

(வீரகேசரி)

8 கருத்துரைகள்:

நீங்க முதல்ல நடிக்கிறத விடனும் ராஜா

இயலுமையிருந்தால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுங்கள். உங்களால் முடியவே முடியாது ஏனெனில், உங்கள் இருப்பை கட்சியில் பாதுகாப்பதற்கான உபாயங்கள்தான் இவை.

அட ,என்னமா டான்ஸ் ஆடுறானுய்யா,20 க்கு ஆதரவளிக்கச் சொன்ன நாதாரியே இவன்தானே. ஹரீஸ் அத பகிரங்கமா சொல்லிட்டானே.

இருபதாம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும்,  அரசாங்கத்திற்கு கூஜா தூக்கவில்லை. அவர்கள் சுமப்பது சாக்கடைக் கழிவுகளை. தற்போது  அவர்களின் தலைவர், ரவூப் ஹக்கீம் இல்லை. மாறாக
இன்றைய அரசின் ராஜபக்ஸ சகோதரர்களே. எது எப்படி இருப்பினும் அவர்கள் நால்வரும் சமார்த்தியசாலிகள். தமது கட்சியின் தலைவரைவிட  சிறந்த அரசியல் மேதைகள். உழைப்பாளிகள்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம்,
அகில இலங்கை  மக்கள் காங்கிரஸூம்  இலங்கை முஸ்லிம்களுக்கு என்றுமே உரிமைகளைப் பெற்றுத்தரப்போவதில்லை. அதை இலங்கை முஸ்லிம்கள் நம்பும் அளவிற்கு இழிச்சவாயர்களும் இல்லை. மாறாக  இலங்கையில் காலங்காலமாக  இருக்கும் முஸ்லிம்களுக்கான  உரிமைகளை இல்லாமல் செய்யாதுவிட்டால் அதுவே போதும்.
சகோதரர் ரவூப் ஹக்கீம்  அவர்கள் இலங்கை அரசியலில் இதுவரை சாதித்தது என்ன.

போதும் உந்தன்ஜாலமே

no need SLMC hereafter, better creating spiritual leadership M NEW POLITICAL PARTY

Double game.all island know it

நாடகத்தின் உச்சக்காட்சி

Post a Comment