Header Ads



ஓமானிடமிருந்து 3.6 பில்லியன் டொலர் கடனாக பெற முயற்சி, 6 மாதத்திற்கு சீனாவின் எண்ணெயை பெற திட்டம்


இலங்கை எண்ணெய் இறக்குமதிக்கு அவசியமான நிதியை பெற்றுக்கொள்வதில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதால் நீண்டகால கடனிற்கு சீனாவிடமிருந்து எண்ணெயை  கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

அமைச்சர் உதயகம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.

ஆறுமாதகாலத்திற்கு சீனாவிடமிருந்து எண்ணெயை பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனா தூதுவர் ஊடாக இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எண்ணெய் கொள்வனவிற்கான ஓமானிடமிருந்து  3.6 பில்லியன் டொலர்களை கடனாக பெறுவதற்கான முயற்சிகளிலும் இலங்கை ஈடுபட்டுள்ளது இதற்கான  பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் உதயகம்மன்பில ஈடுபட்டுள்ளார்.

2 comments:

  1. Whoever living Arabic countries and Oman tell them don´t given any aids funds to Sri lanka,Here our muslims community suffering this racist goverments.

    ReplyDelete
  2. ஓமான் ஒரு முஸ்லிம்நாடு, இந்த நாட்டில் முஸ்லிம்கள் வாழும் ஒரே காரணத்துக்காகத்தான் அவரகள் இலங்கைக்கு உதவிசெய்ய முன்வந்துள்ளார்கள். இந்த கேடுகேட்ட இனவாதிகள் முஸ்லிமகளுக்கு அநியாயம் செய்து கொண்டே முஸ்லிம்களின் உதவிதேடி கையேந்துகின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.