Header Ads



இவ்வருடம் சவுதி மதீனா பல்கலைக்கழகத்துக்கு இலங்கையிலிருந்து 25 மாணவர்கள் தெரிவு


சவுதி அரேபியாவில் இயங்கி வரும் மதீனா பல்கலைக்கழகமான ஜாமியத்துல் இஸ்லாம் பில் மதீனாவிற்கு வருடா வருடம் மௌலவி பட்டம் முடித்த மாணவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப மாணவர்கள் தெரிவு செய்யப்படுவது வழமை.

அந்த வகையில், இவ்வருடம் இலங்கையிலிருந்து 25 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன், அதில் கல்முனை பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இரண்டு மாணவர்கள் கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரியின் மாணவர்கள் என கல்லூரியின் அதிபர் ஏ.சி.தஸ்தீக் (மதனி) தெரிவித்தார்.

மருதமுனை அக்பர் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மட் தெளபீக் றபீக்கா தம்பதிகளின் மூத்த புதல்வரான எம்.ரி.அல்தாப் (ஹாமி) மற்றும் சாய்ந்தமருது முதலாம் பிரிவைச் சேர்ந்த அப்துல் மஜீத் முஹம்மட் தம்பி றுவைதாவின் இரண்டாவது புதல்வரான எம்.எம்.றிஸ்ஹான் (ஹாமி) ஆகியோர் ஹாமியா அரபுக் கல்லூரியில் 8 வருடங்கள் கல்வி கற்று மௌலவி பட்டம் முடித்து வெளியேறிய மாணவர்களாவர்.

உயர்தரத்தில் சித்தி அடைந்த இருவரும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்துக்கு தெரிவாகி உள்ளதுடன், அல்தாப், இஸ்லாமிய கற்கை நெறிகள் மற்றும் அரபி மொழிப் பிரிவிலும்

றிஸ்கான், கலை, கலாசார பிரிவிலும் முதலாம் வருட மாணவர்களாக கல்வி கற்று வருகின்ற நிலையிலேயே மதீனா பல்கலைக்கழகத்தில் கற்பதற்கு இவர்களுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது.

றாசிக் நபாயிஸ் -


3 comments:

  1. What for 8 yes? Don't waste life time

    ReplyDelete
  2. What for 8 yes? Don't waste life time

    ReplyDelete
  3. உள்ளூர் பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களைத் தவிர்த்து ஏனையவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதே கல்வியில் சமநிலையைப் பேண முடியுமாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.