Header Ads



சீமெந்து இறக்குமதிக்கு டொலர் இல்லை, 15ஆம் திகதி வரை நாட்டில் அபிவிருத்திப் பணிகளைச் செய்ய முடியாது: அமைச்சர் நிமல்


(சி.எல்.சிசில்)

எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் நாட்டில் எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் முன்னெடுக்க முடியாது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சீமெந்து தட்டுப்பாடு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையிடம் டொலர் இல்லாததால் சீமெந்து இறக்குமதிக்கு வழியில்லை எனவும், தற்போது நாட்டின் சீமெந்துத் தேவையில் 65% மாத்திரமே உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். TL

1 comment:

  1. இதுபோன்ற ஒலமொட்டைகள் இருக்கும்வரை நா்ட்டையோ பதுளையோ ஒருபோதும் அபிவிரு்த்தி செய்ய முடியாது என்பதை இந்த நா்ட்டு மக்கள் தற்போது சரியாகப்புரிந்து வைத்திருக்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.