Header Ads



12 நாட்களில் 33,000 ஆயிரம் கடவுச்சீட்டுகள் விநியோகம் - இளைஞர், யுவதிகள் வெளிநாட்டுக்கு ஓட ஆர்வம்


இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் 33000 கடவுச்சீட்டுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் தலைமைக் காரியாலத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1500 முதல் 1700 பேர் வரையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஒருநாள் மற்றும் சாதாரண முறையில் இவ்வாறு கடவுச்சீட்டக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி முதல் இரண்டு வாரங்களில் மொத்தமாக தலைமைக் காரியாலயத்தில் 23500 பேர் புதிய கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, மாத்தறை, கண்டி, குருணாகல் மற்றும் வவுனியா ஆகிய பிராந்திய காரியாலயங்களின் ஊடாக 10200 பேர் கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இளைஞர் யுவதிகளே அதிகளவில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதாகவும் வழமைக்கு மாறாக அதிகளவானோர் புதிய கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதாகவும் குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.