Header Ads



அகில இலங்கை YMMA பேரவையின் நடப்பு ஆண்டுக்கான தலைவராக போட்டியின்றி மீண்டும் சஹீட் எம். ரிஸ்மி தெரிவு


- இக்பால் அலி -

அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் நடப்பு ஆண்டுக்கான தேசியத் தலைவராக போட்டியின்றி மீண்டும்  சஹீட் எம். ரிஸ்மி தெரிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் கிளையினர் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர். அதேவேளை செயலாளராக  சட்டத்தரணி சாபித் சவாத்  மீண்டும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

கொரோனாவை கருத்திற் கொண்டு அகில இலங்கை வை. எம். எம். பேரவையின்  பொது நிர்வாகத் தெரிவுக்காக 2021-2022 ஆண்டுகளுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட வேளையில்   இந்த தெரிவுகள் இடம்பெற்றுள்ளன. 

இதில் செயற்குழு உறுப்பினர்களுக்கிடையே   தெரிவுகளும்  போட்டியின்றி நடைபெறக் கூடிய வாய்ப்பு அதிகளவு காணப்படுகிறது. எனினும் பொருளாளர் தெரிவு செய்வதில் மட்டும்  போட்டி காணப்படுகின்றது. இறுதி நேரத்தில்  கொரோனா தொற்றுக் காரணமாக  பொருளாளர் தெரிவிலும் விட்டுக் கொடுப்புடன் போட்டியின்றி பொருளாளர் தெரிவு செய்யப்படலாம் எனவும்  எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் வரலாற்றில் முதல் தடவையாக 24  புதிய கிளைகள் உள்வாங்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  இதில்  புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 10 கிளைகளுடன்    செயற்பாடாமையால் அங்கத்துவம் இழந்த  பழைய 14 கிளைகளும்  மீண்டும் புதுப்பிக்கப்பட்டு உள்வாங்கப்பட்டுள்ளது. மொத்தமாக மாவட்ட மட்டத்தில் புதிய  24 கிளைகள் உள்வாங்கப்பட்டுள்ளன.  

வை. எம் எம். ஏ வரலாற்றில் ஒரே தடவையாக 24 கிளை உள்வாங்கப்பட்டது இதுவே முதற் தடவையாகும்.  பொதுவாக  ஒன்று அல்லது இரண்டு தான் உள்வாங்கப்படும். தற்போது வை. எம். எம். ஏ அமைப்புக்கு நாடளாவிய ரீதியில் 160 க்கு மேற்பட்ட  கிiளைகள் உள்ளன.

இதன் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி கடந்த காலங்களில் பொதுச் செயலாளராக கடமையாற்றிய கால கட்டத்தில்  இருந்து இன்று வரையிலும் நாடளாவிய ரீதியில் புதிய கிளை அபிவிருத்தி செய்யும் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி மிகுந்த சுறு சுறுப்புடன் செயற்பட்டு வரும் ஒருவர். அவர் மீண்டும் தேசியத் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் வை. எம். எம். ஏ. கிளையினர் தலைவர் சஹீட் எம்.  ரிஸ்மிக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக மேலும் தெரிவிக்கின்றனர். 

இக்பால் அலி

20-09-2021

1 comment:

Powered by Blogger.