Header Ads



மாலைத்தீவுக்கு மண் கடத்தினாரா, அமைச்சர் மஹிந்த..? சாணக்கியன் Mp குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலகுவேன்


தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்று (08) நாடாளுமன்றில் முன்வைத்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் தாம் பதவி விலக தயாராக இருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மாலைத்தீவில் உள்ள ஒரு தீவினை நிரப்புவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவர் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்று நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அண்மைய காலங்களில் இதற்காக சுமார் ஆறரை கியூப் மணல் இலங்கையில் இருந்து மாலைத்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இதற்காக இலங்கையில் உள்ள நிறுவனம் ஒன்றினால் வரிப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் சாணக்கியன் நாடாளுமன்றில் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சாணக்கியன் முன்வைத்த இந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் அமைச்சர் பதவியை மாத்திரமல்லாது,  நாடாளுமன்ற உறுப்புரிமையையும் துறக்க தயார் என அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இந்திய அந்தமான் தீவு க்கு கடத்தி னால் பிரச்சனை இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.