Header Ads



நாட்டில் மத மோதல்களை உருவாக்க முயற்சி - மறைந்திருந்த நபர்கள், சிலரின் நிகழ்ச்சிநிரலை பூர்த்தி செய்ய வெளியே வருகை JVP


நாட்டில் மதரீதியிலான மோதல்களை உருவாக்குவதற்கான முயற்சிகள் மீண்டும் இடம்பெறுகின்றன என ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.

கைக்குண்டுகள் திடீரென கைப்பற்றப்பட்டமை, இனந்தெரியாதவர்களிடமிருந்து மின்னஞ்சல் அச்சுறுத்தல் போன்றவற்றின் மூலம்; இது புலனாகியுள்ளது என ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிச தெரிவித்துள்ளார்.

மறைந்திருந்த சில நபர்கள் சில தரப்பினரின் நிகழ்ச்சிநிரலை பூர்த்தி செய்வதற்காக வெளிNயுவந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர்உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களை தண்டிப்போம் என தெரிவித்தே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதகளை நிறைவேற்றுவதற்காக கர்தினாலும் கத்தோலிக்க சமூகமும் இரண்டு வருடங்களாக பொறுமையாக காத்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கத்திதோலிக்க சமூகம் சர்வதேசசமூகததின் முன்னால் செல்வதற்கு தீhமானித்துள்ளது இந்த பின்னணியில் சிலர் மதமோதல்களை உருவாக்க முயல்கின்றனர் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். thinakkural

No comments

Powered by Blogger.