Header Ads



கொரோனா வைரஸ் பரவலுக்கு, இளைஞர்களே பெருமளவிற்குக் காரணம் - Dr சமித்தா கினிகே குற்றச்சாட்டு


இளைஞர்களே கொரோனா வைரஸ் பரவலிற்கு பெருமளவிற்கு காரணமாக உள்ளனர் என  தலைமை தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சமித்தா கினிகே தெரிவித்துள்ளார்.

சமூகத்திற்குள் அவர்கள் அதிகளவு நடமாடுவதால் அவர்கள் கொரோனா பரவலிற்கு அதிகளவு காரணமாக காணப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களிற்கு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய சமூக பொறுப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 3.3 மில்லியன் இளைஞர் சனத்தொகையில் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களில்50 வீதமானவர்கள் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இன்னமும்  அதிக ஆர்வத்தை அவர்கள் மத்தியில் எதிர்பார்க்கின்றோம் என தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சமித்தா கினிகே தெரிவித்துள்ளார்.

20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட 96 பேர் உயிரிழந்துள் ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வெற்றிகரமாக தடுப்பூசியை செலுத்தியுள்ள போதிலும் இளைஞர்கள் மத்தியில் காணப்படும் தயக்கத்திற்கு தீர்வை காணவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் கருவளப் பிரச்சினைகள், ஆண்மைக் கோளாறுகள் ஏற்படும் என தெரிவிக்கும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். TL

No comments

Powered by Blogger.