Header Ads



அனைத்து இலங்கையர்களும் பாகிஸ்தானின் மீது அன்பு கொண்டுள்ளனர், இதற்கு நாம் நன்றியுடையவர்களாக இருப்போம்


இன்று, மிகவும் சவாலான மற்றும் கெளரவமான சேவையான இலங்கையின் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராக எனது  சேவையிலிருந்து நிறைவுபெறும் தினமாகவும். இச்சேவையானது கோவிட் 19 தொற்றுநோய் மற்றும் இராஜதந்திர பொறுப்புகள் காரணமாக சவாலானதாக எனக்கு இருக்கவில்லை.மாறாக, இலங்கையர்களால் எனக்கும், உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கும் அளிக்கப்பட்ட மரியாதை மற்றும் அன்பின் அளவுக்கு ஏற்ப சேவை செய்வதே செய்வதே மிகவும் சவாலாக இருந்தது. இலங்கை மக்கள் என்மீது அவ்வளவு பெரும் அன்பையும் ,மரியாதையையும் கொண்டிருந்தனர்.

கோவிட் 19 தொற்று ஏற்படுத்திய சவால்களால் ஓரளவு சிரமங்கள் இருந்தபோதிலும், எமது அண்டை நாட்டின் அதிருப்தியுக்கு மத்தியிலும், இலங்கை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள இலங்கை சகோதரர்களுடன் முனைப்புடன் பழகவும், சேவையாற்றவும் சந்தர்ப்பம் கிடைத்தது.

யாழ்ப்பாணம் தொடக்கம்  ஹம்பாந்தோட்டை வரை மேலும் மட்டக்களப்பு/திருகோணமலை தொடக்கம் கொழும்பு வரை, எனது ஒவ்வொரு விஜயத்தின் போதும் ஒவ்வொரு இலங்கையினரினதும் கண்களிலும் என் நாட்டின் மீது கொண்டுள்ள அன்பும் மரியாதையும் தெளிவாகத் தெரிந்தது. அனைத்து இலங்கையர்களும் பாகிஸ்தானின் மீது அபார அன்பும் மரியாதையையும் கொண்டுள்ளனர். இதற்கு ,நாம் எப்போதும் நன்றியுடையவர்களாக இருப்போம்.

இவ்வருடம் பெப்ரவரி  2021 இல் நமது பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது  வழங்கப்பட்ட அமோக  வரவேற்பு மற்றும் வெற்றிகரமான அவரது இலங்கை விஜயமானது, இருநாட்டுக்குமிடையிலான பரஸ்பர உறவு மற்றும் மரியாதையை வெளிப்படுத்துகிறது.

இலங்கையில் இடம்பெற்ற  போரில் நாம் வழங்கிய ஆதரவை முழுமனதுடன் ஒப்புக் கொண்டு, நன்றி பாராட்டும்  இலங்கை அரசாங்கம், இராணுவம்  மற்றும்  இலங்கை மக்களுக்கு  எனது மனமார்ந்த நன்றிகள். ஆனால், இலங்கையின் நெருங்கிய அண்டை நாட்டின் பிராந்திய புவிசார் அரசியல் சிக்கல்கள் காரணமாக காட்டப்படும் அசாதாரண எச்சரிக்கையால் இப்பாராட்டுகள் மற்றும் எமது இரு நாட்டுக்கிடையிலான பரஸ்பர நேர்மறையான முயற்சிகள் சிதைக்கப்படுகின்றன. இருப்பினும், இலங்கையின்  நெருங்கிய அண்டை நாடாக இல்லாத போதும், ஜெனீவாவில் நடந்த  கடந்த UNHRC மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவாக  பாகிஸ்தான் இருந்தது போல் எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்.

இலங்கை பெளத்த பிக்குகளினுடனான எனது சந்திப்பின் போதும் அவர்களுடனான எனது உரையாடலின் போதும் என் மீது காட்டப்பட்ட மரியாதை, அன்பு மற்றும் புரிதலினால் மத நல்லிணக்கத்திற்கான அவர்களின் நேர்மறையான மற்றும் பயனுள்ள பங்கை நான் மிகவும் உணர்ந்து கொண்டேன். பாகிஸ்தானில் 2021 ஏப்ரல் மாதத்தில் இலங்கை பெளத்த பிக்குகளின் வருகையானது, அண்டை நாடுகளின் ஊடகங்களின் வழக்கமான பொய் பிரச்சாரத்திற்கு எதிராக பாகிஸ்தானில் உள்ள பெளத்த பாரம்பரியத்தை பாதுகாக்கும் நமது அரசாங்கத்தின் கரிசனையை  மற்றும் பாகிஸ்தான் மக்களின் அக்கறையை  உறுதிப்படுத்துகிறது.

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தால் சமீபத்தில் தயாரிக்கப்பட்ட "பாகிஸ்தானின் காந்தாரா - பெளத்த  பாரம்பரியம்" பற்றிய கலை ஆவணப்படம் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இம்முயற்சியானது, எமதிருநாட்டு உறவுகளை  நிச்சயம் மேலும் வலுப்படுத்தும்.

எனது நாட்டின் மீது கொண்டுள்ள மிகுந்த ஒத்துழைப்பு மற்றும் நல்லெண்ணத்திற்கு இராஜதந்திர மட்ட உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக, பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகராக நான் சேவையாற்றிய போது, இந் நாட்டின் அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் அவர்கள் காட்டிய  ஆதரவிற்கும் நல்லெண்ணத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்று , எனது சேவைக்காலத்திற்கு பிறகு வரவிருக்கும் உயர் ஸ்தானிகருக்கும்  உங்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன். இறைவனின் நாட்டப்படி, பரஸ்பர மரியாதை மற்றும் உறவை  மேலும் பேணுவதன் மூலம் நம்மிருநாடுகளும் ஒன்றாக செழிப்பையும் அபிவிருத்தியையும்  நோக்கிச் செல்வோமாக !!

 இலங்கை பாகிஸ்தான் தூதரகம் 

2 comments:

  1. You are wrong. Tamils are against Pakistan, because Pak supports SL at UNHRC for the human rights violations done by SL Government

    ReplyDelete
  2. please don’t come to our areas North and East of SL

    ReplyDelete

Powered by Blogger.