Header Ads



முஸ்லிம்களின் மனம் புண்பட்டுள்ளது, இஸ்லாத்தில் வஹாப் வாதம் இல்லை, ஞானசாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா..?


நான் வஹாப்வாதி அல்ல. இஸ்லாமில் வஹாப் வாதம் இல்லை. முஸ்லிம் மதத் தலைவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கும் ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என வினவிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி நபி அவர்கள் எனக் கூறியமையால்

உலகளாவிய ரீதியில் வாழும் முஸ்லிம்களின் மனம் புண்பட்டுள்ளது என்றார்.

நாட்டில் மீண்டும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தாக்குதலை நடத்தப்போகும் குழுவும் தனக்குத் தெரியும் எனவும், எந்தநேரத்திலும் தாக்குதலை மேற்கொள்ள அக்குழு தயாராக உள்ளதாகவும் அவர் கூறியிருக்கின்றார் என முஜிபுர் ரஹ்மான் எம்.பி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (22) சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தத் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதிக்கு தான் அறிவித்துள்ளதாகவும் தேரர் கூறியுள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பில் நன்கு அவர் அறிந்துள்ளதாகவே தெரிகிறது.

இதுபோன்ற கருத்துக்களால் நாட்டுக்கு சுற்றுலாத்துறையினர் வருவார்களா? முதலீட்டாளர்கள் வருவார்களா? எனவும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி கேள்வி எழுப்பினார். அக்கூற்று தொடர்பில், ஞானசார தேரர், சி.ஐ.டிக்கு அழைத்து விசாரிக்கப்பட்டுள்ளாரா? தேரர் குறிப்பிடும் குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனரா? எனவும் அவர் வினவியுள்ளார்.

ஞானசாரரால் குரான் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும்திரிபுபடுத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்கள் என தெரிவித்த முஜிபூர் ரஹ்மான் எம்.பி, தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அல்லாஹ்வை குறிப்பிட்டு கூறியதால், உலகில் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்களின் நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நான் வஹாப்வாதி அல்ல. இஸ்லாமில் வஹாப் வாதம் இல்லை. முஸ்லிம் மதத் தலைவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா எனவும் அவர் இதன்போது வினவினார்.

No comments

Powered by Blogger.