Header Ads



மல்கம் ரஞ்சித்திற்கு பௌத்த தேரர் எச்சரிக்கை - நாடகம் ஆடி, தேசத்துரோகி ஆக வேண்டாமெனவும் அறிவுரை


ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, கர்தினாலும், அருட்தந்தை சிறில் காமினியும் அரசாங்கத்தையும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் பற்றியும் கடுமையாக விமர்சித்திருந்தார்கள் என மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் சர்வதேசத்தை நாடப்போவதாகவும் கூறினார்கள். எமக்கு இந்த நேரத்தில் சில காரணங்களை தெரிவிக்க வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரணைகள் இடம்பெற்று, அதிகமானோர் கைது செய்யப்பட்டு, வழக்குகள் தொடர்ந்து, மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாமும் உருவாக்கப்பட்டுவிட்டது.

அப்படியிருக்கும் நிலையில், அரசியல் நோக்கத்திற்காக கர்தினாலின் இந்த நாடகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். பிரதமர் மஹிந்த ராஜபக் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் எதிர்வரும் வாரங்களில் இத்தாலியில் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பின்னர் வத்திகானுக்கும் செல்லவுள்ளதாக கர்தினால் கூறியுள்ளார்.

இந்த நாட்டில் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லவும், வெளிநாடுகளில் கொடுக்கல் வாங்கல் செய்யவும், வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கவும், அதே போல் மாநாடுகளில் கலந்துகொள்ளவும் கர்தினாளிடம் அனுமதி பெற வேண்டுமா? பிரதமரும், வெளிவிவகார அமைச்சரும் இந்த விசாரணைகள் பற்றி பொய்யான கருத்துக்களை வெளியிடவே வத்திக்கான் செல்கின்றார்கள் என கர்தினாலுக்கு எப்படி தெரியும்? கர்தினால் நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்க பார்க்கின்றார்.

ஆகவே இந்த தேவையற்ற பிரச்சினையாகக்ளை உருவாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த பிரச்சினையை சர்வதேசத்திற்கு, ஜெனீவாவிற்கு மற்றும் சர்வதேச ஒன்றியங்களுக்கு கொண்டு செல்ல கர்தினால் மற்றும் கத்தோலிக்க திருச்சபை முயற்ச்சிக்குமாக இருந்தால், கர்தினால் சம்பந்தனுக்கு இணையானவர், கர்தினால் விக்னேஸ்வரனுக்கு இணையானவர், கத்தோலிக்க திருச்சபை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இணையானது.

ஏனென்றால் ஜெனீவா உட்பட சர்வதேச நாடுகளுக்கு கோல் சொல்லி நாட்டை அசௌகரியத்திற்கு உட்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டது.

ஆகவே கர்தினால் உட்பட கத்தோலிக்க சபை இந்த நாட்டை அசௌகரியதற்கு உள்ளாக்கும் நோக்கில் உள்நாட்டு பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணாமல், இதை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வார்களாயின், அது தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்ததை போன்று ஒரு செயல் ஆகும்.

ஆகவே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ,தான் பிறந்து வளர்ந்த நாட்டிற்கு துரோகம் செய்வாராயின் அவர் ஒரு தேச துரோகி ஆவார். பிரச்சினைகள் இருந்தால் இங்கேயே அதற்கு தீர்வு காண வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த சடலங்களின் மேல் கர்தினால் செய்யும் அவருடைய அரசியல் நாடகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.   Tamilwin

5 comments:

  1. கர்தினால் அவர்கள் ஒருபோதும் அரசியல் பேசவில்லை. கடவுள் தியானத்தில் இருந்த அப்பாவி மக்களை அநியாயமாகக் கொலை செய்ய அந்த படுபாவத்தின் காரணமான கொலை செய்யப்பட்ட மக்களின் குடும்பங்கள் நியாயத்தை வேண்டிநிற்கின்றன. அந்த மக்களைப் பிரதிநிதிப்படுத்தி நீதியையும் நியாயத்தையும் நிலைநிறுத்துமாறு கேட்பது ஒருபோதும் அரசியல் தலையீடாக மாட்டாது.அத்தகைய அநியாயமிழைக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் உரிமையைப் பெற்றுக் கொடுப்பது ஆட்சி செய்யும் அரசியல்வாதிகளின் தலையாய கடமை. அந்த கடமையை உணர்த்துவது தவிர கர்தினால் வேறு எந்த அரசியல் தலையீட்டையும் செய்யவிலலை என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. கர்தினால் அவர்கள் ஒருபோதும் அரசியல் பேசவில்லை. கடவுள் தியானத்தில் இருந்த அப்பாவி மக்களை அநியாயமாகக் கொலை செய்ய அந்த படுபாவத்தின் காரணமான கொலை செய்யப்பட்ட மக்களின் குடும்பங்கள் நியாயத்தை வேண்டிநிற்கின்றன. அந்த மக்களைப் பிரதிநிதிப்படுத்தி நீதியையும் நியாயத்தையும் நிலைநிறுத்துமாறு கேட்பது ஒருபோதும் அரசியல் தலையீடாக மாட்டாது.அத்தகைய அநியாயமிழைக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் உரிமையைப் பெற்றுக் கொடுப்பது ஆட்சி செய்யும் அரசியல்வாதிகளின் தலையாய கடமை. அந்த கடமையை உணர்த்துவது தவிர கர்தினால் வேறு எந்த அரசியல் தலையீட்டையும் செய்யவிலலை என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  3. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்

    ReplyDelete
  4. HAMUDURU ANE JAYAWEWA.APE RATA TA JAYAWEWA.OKATTIYA RATEYTH EKKA BOHOMADA AADARAI

    ReplyDelete
  5. எதுடா துரோகம் தான் சார்ந்த மக்கள் துன்பம் படவைத்த பாதகர்களின் தந்திரத்தை ஏற்றுக் கொள்ள உன்னால் முடியுமா?

    ReplyDelete

Powered by Blogger.