Header Ads



பால்மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால், பாதுகாப்பற்ற பொருட்கள் விற்பனை


இலங்கை கடைகளில் பால்மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் பாதுகாப்பற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சந்தையில் ஏற்பட்டுள்ள பால்மா தட்டுப்பாட்டையடுத்து ஐஸ்கிறீம் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பால்மாவை சுகாதார பாதுகாப்பற்ற பக்கட்களில் விற்பனை செய்யப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை விற்பனை நிலைய பகுதியில் அந்த பால்மா பொதியிடப்பட்ட இடம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பெருமளவிலான பால்மா தொகை ஒன்றையும் கைப்பற்றியதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதுவரையில் சந்தையில் பால்மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் 400 கிராம் பக்கட்களில் பொதியிட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பால்மா வை விற்பனை செய்தவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.