Header Ads



ஐ.நா மனித உரிமை பேரவையில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பியதற்காக பாகிஸ்தான், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மீது இந்தியா சீற்றம்


ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பியதற்காக பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பான OICக்கு இந்தியா காட்டமாக பதில் வழங்கியுள்ளது.

ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் 48ஆவது கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் வெளிப்படையாகவே பயங்கரவாதிகளுக்கு பயிற்சி, பணம் மற்றும் ஆயுதங்களை வழங்கும் ஒரு நாடு என இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் ஐநாவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் இவ்வாறு ஆதரவு வழங்குகிறது என்றும் . அதை பாகிஸ்தான் தனது அதிகாரபூர்வ கொள்கையாகவே வைத்துள்ளது என இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நிரந்தர பிரதிநிதித்துவக் குழுவின் முதன்மை செயலர் பவன் பாதே இதை தெரிவித்துள்ளார்.

அதேபோன்று “இந்தியா பாகிஸ்தானை போன்ற ஒரு தோற்றுப்போன நாட்டிடம் இருந்து இந்தியா பாடம் கற்று கொள்ள தேவையில்லை என்றும் பயங்கரவாதம் மற்றும் மனித உரிமை மீறல்களில் பாகிஸ்தான் மைய இடமாக விளங்குகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோன்று ஐநா மனித உரிமை ஆணையத்தை இந்தியாவுக்கு எதிரான தவறான பிரசாரத்திற்கான மேடையாக பயன்படுத்துவதே பாகிஸ்தானின் வேலை என்றும் தெரிவித்தார்.

முன்னதாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெறும் நீண்டகால பிரச்னையால் நடைபெற்றும் “முறையான” மனித உரிமை மீறல்கள் என கூறப்படும் பிரச்னைகள் குறித்து ஐநா மனித உரிமைகள் அணையம் பேச வேண்டும் என இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்திருந்தது. bbc

2 comments:

  1. இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை வரவேற்கும் பயங்கரவாத நாடான பாக்கிஸதானுக்கு, காஷ்மீரை பற்றி கதைக்க அருகதை இல்லை.

    ReplyDelete
  2. அரபு நாடுகளில் பிச்சையெடுத்து பிழைப்பு நாடாதும் ஆசியாவின் அசிங்கத்தில் பிறந்த (இந்தியாவில்) இந்து தீவிரவாதிகளை முதலில் அந்த நாடுகளிற்குள் பிறவேசிக்கவே தடை செய்ய வேண்டும்.

    ராஜாதந்திரா ரீதியில் அருகிலிருக்கும் அத்தனை நாடுகளிடமும் தோற்றுப்போன இந்தியாவின் இத்துப்போன அரசியல் கொள்கையும் சீனாவிடம் அடிக்கு மேல் அடி வாங்கி தோற்றுப்போன இந்திய இராணுவ பன்றிகள் தங்களுடைய வீரத்தை அப்பாவி காஸ்மீறிகளிடம் காட்ட மட்டுமே இவர்கள் தான் லாயக்கு

    ReplyDelete

Powered by Blogger.