Header Ads



தடுப்பூசியை பெற்றுக்கொள்ள இருப்பவர்களுக்கு, பொலிஸ் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு


கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்களுக்கு பொலிஸ் திணைக்களம் விசேட அறிவிப்பை விடுத்துள்ளது. 

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணி, சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ கேட்டுக்கொண்டார். 

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வரும் சிலர் சமூக இடைவெளியை கவனத்திற்கொள்ளாது நடந்துகொள்கிறார்கள் என தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

சமூக இடைவெளி மற்றும் முறையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத மக்களுக்கிடையே கொவிட் தொற்று நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. அரசாங்க பொது வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு சுகாதார அறிவறுத்தல்களைப் பின்பற்றும் வழிவகைகளை அரசாங்கம் செய்ய வேண்டும். அவற்றில் சமூகஇடைவௌியைப் பேணுவது எப்படி என சரியான போதனைகளும் செயன்முறைகளும் அவசியமாகும்.

    ReplyDelete
  2. அரசாங்க பொது வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு சுகாதார அறிவறுத்தல்களைப் பின்பற்றும் வழிவகைகளை அரசாங்கம் செய்ய வேண்டும். அவற்றில் சமூகஇடைவௌியைப் பேணுவது எப்படி என சரியான போதனைகளும் செயன்முறைகளும் அவசியமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.