Header Ads



மிகவும் உணர்ச்சிபூர்வமான சில, முடிவுகளை அரசு எடுக்கிறது - பசில்


வசதிபடைத்தவர்களை மேலும் வளப்படுத்துவதை விடுத்து வறிமையை ஒழித்து வறியவர்களை மேம்படுத்தும் இம்முறை வரவு செலவுத்திட்டம், உற்பத்தி பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டதாகும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நிதியமைச்சில் நடைபெற்ற அரச ஊடக தலைவர்களுடனான சந்திப்பில் கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,..

வசதி உள்ளவர்களுக்கான வரவு செலவுத்திட்டம் அல்லாது வறியவர்களை வளப்படுத்தும் திட்டமாகும்.கொவிட் தடுப்பூசி வழங்கலை வெற்றிகரமாக மேற்கொள்வதன் மூலம் வரவு செலவுத் திட்டத்தில் உயர் பெறுபேற்றை பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிலம் மற்றும் இந்நாட்டு வளங்களை முடிந்தளவு செயல்திறன் மிக்கதாக உபயோகப்படுத்துவதோடு கொரோனா வைரஸ் நிலைமையால் பொருளா தாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை பெருட்படுத்தாது அரச ஊழியர்களினதும் மற்றும் ஓய்வூதியகாரர்களின் சம்பளத்தில் எவ்வித குறைப்பும் செய்யப்படவில்லை. அவை எவ்வித குறைப்புமின்றி தொடர்ந்தும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.சுபிட்ச த்தின் நோக்குக்கு அமைய அனைத்து உற்பத்திகள், நிர்மாணங்கள் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க அரசு தீர்மானித்துள்ளது.

உணர்ச்சிவசப்படுதல் என்பது பலவீனம் என்பது அல்ல,அரசு மிகவும் உணர்ச்சிபூர்வமான சில முடிவுகளை எடுக்கும் போது அனைத்து தரப்பினரதும் கருத்துகளை ஆழமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.இம்முறை வரவு செலவு திட்டத்தில் வர்த்தகர்களுக்கு மற்றும் வணிக துறைக்கு போதுமானளவு ஊக்குவிப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2 comments:

  1. எந்தவித நோக்கங்களோ இலக்கோ அற்ற வரவுசெலவுத் திட்டத்துக்கான உறுதியான அடிப்படைவருமானங்கள் இன்றி தயாரிக்கப்படும் வரவுசெலவுத்திட்டம் மற்றொரு அலடின் லாம்பு என்பது பொதுமக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர்.

    ReplyDelete
  2. எந்தவித நோக்கங்களோ இலக்கோ அற்ற வரவுசெலவுத் திட்டத்துக்கான உறுதியான அடிப்படைவருமானங்கள் இன்றி தயாரிக்கப்படும் வரவுசெலவுத்திட்டம் மற்றொரு அலடின் லாம்பு என்பது பொதுமக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.