Header Ads



பிரித்தானிய இலங்கை முஸ்லிம் இயக்கங்களின் (கொஸ்மோஸின்) புதிய நிர்வாகிகள் தெரிவு


பிரித்தானியாவில் உள்ள இலங்கை முஸ்லிம் இயக்கங்களின் ஒன்றிணைந்த அமைப்பான கொஸ்மோஸின்  வருடாந்த மாநாடு அண்மையில் லண்டன் ஹரோவில் உள்ள இலங்கை முஸ்லிம் கலாசார நிலையத்தில் ZOOM தொழில்நுட்பம் மூலம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கொஸ்மோஸ் அமைப்பின் முன்னாள் தலைவர்களான முபாரக் ஜெய்னுலாப்தீன் மற்றும் ரிஸ்வான் வஹாப் ஆகியோர் உட்பட 15 அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பதவி விலகும் தலைவர் லியாஸ் அப்துல் வாஹித் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகள் பற்றி அவர் விளக்கமளித்தார்.

திகன, அம்பாறை, குருநாகல், பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத் தாக்குதலின் போது கொஸ்மோஸ் பிரித்தானிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர் விபரித்து, கொஸ்மோஸ் ஏற்பாட்டில் உருவாக்கப் பட்ட பிரித்தானிய சகல கட்சிப் பாராளுமன்ற குழுவின் நடவடிக்கைகள், இலங்கை முஸ்லிம்களுக்கான உலக ஒன்றியம் உருவாக்கம் பற்றியும் விளக்கினார்.

கொஸ்மோஸின்   அடுத்த இரு வருடங்களுக்கான புதிய அங்கத்தவர் தெரிவின் போது பின்வருவோர் உத்தியோகபூர்வமாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.

தலைவர் சாகிர் நவாஸ், செயலாளர் சிபான் நயீம், பொருளாளர் அக்ரம் அப்துல் அஸீஸ், உப தலைவர் ஆதில் சர்தார்தீன், உதவிச் செயலாளர் முஹம்மத் நஹீம் உபைத்,  உப பொருளாளர் ஜெய்னுலாப்தீன்.

இமாம் தல்ஹா சித்தீக் சமூக சேவை செய்தலின் முக்கியத்துவம் பற்றி விசேட உரையொன்றை நிகழ்த்தினார். பதவி விலகும் செயலாளரும் புதிய தலைவருமான சாகிர் நவாஸ் நன்றி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.