Header Ads



அடிப்படைவாத கொள்கையுடைய நபர்களை அடையாளம் காட்டுமாறு கோரிக்கை - தனி நபர்கள், அமைப்புகளை தொடந்தும் கண்காணிப்பு


அடிப்படைவாத கொள்கையுடைய நபர்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக பாதுகாப்பு தரப்பினரிடம் வழங்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறான நபர்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் தீவிரமாக தேடி வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அடிப்படைவாத கொள்கைகள் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு, சமூகத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட நபர்கள் மற்றும் சில அமைப்புகளை தொடந்தும் கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. உன்னுடைய பெயர முதல்ல போட்டுக்கோ

    ReplyDelete
  2. Janasarthero bavtha kadumpokku vathi

    ReplyDelete
  3. சமூக வலைதளங்களை கூர்ந்து அவதானித்தால் மனம் பிறழ்வானவர்களை அறிந்து கொள்ளலாம். சொந்தப் பெயர்களை பதிவிடாது அநமோதய பெயர்களில் அசிங்கமான வார்த்தைகளை உபயோகிப்பர். மிதவாதம் பேசுவோர் யதார்த்தம் பற்றி பேசுவோர் நல்லிணக்கம பற்றிப் பேசுவோரைத் தரக்குறைவாக விமர்சனம் செய்வர். எனவே அவர்களைக்கண்டு பிடிக்க இலகுவான வழியிருக்கையில் தலையைப் பிய்த்துக் கொள்ளத்தேவையில்லை.

    ReplyDelete
  4. எய்தவன் இருக்க அம்பை தேடும் பாணியில் அநியாயம் செய்து வர்ரீங்க

    ReplyDelete

Powered by Blogger.