Header Ads



கொரோனாவை ஒழிக்கவும், உலக மக்கள், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திற்காகவும் பிரார்த்தித்து ஒருவார பிரித் பாராயண நிகழ்வு


கொவிட்-19 தொற்றை முற்றாக இல்லாதொழிக்க வேண்டியும், அனைத்து உலக மக்கள் மற்றும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திற்காகவும் பிரார்த்தித்து வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் மிரிசவெட்டிய விகாரையில் நடைபெற்ற விசேட ஒரு வார பிரித் பாராயண நிகழ்வு நேற்று (13) நிறைவடைந்தது.

அட்டமஸ்தானாதிபதி கலாநிதி பல்லேகம சிறிநிவாச தேரர் மற்றும் ருவண்வெலி சைத்தியாராமாதிகாரி பல்லேகம ஹேமரதன தேரர் ஆகியோரின் அனுசாசனத்திற்கமைய மிரிசவெட்டிய ரஜமஹா விகாராதிபதி கலாநிதி ஈதல்வெடுனுவெவே ஞானதிலக தேரர் இந்த பிரித் புண்ணிய நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.

கடந்த செப்டம்பர் 07ஆம் திகதி ஆரம்பமாகிய இந்த ஒரு வார பிரித் பாராயண நிகழ்விற்கு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் மஹா சங்கத்தினருக்கு அழைப்புவிடுத்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட அரசாங்கத்திற்கும், சுகாதார துறை மற்றும் பாதுகாப்பு துறையில் சேவையாற்றும் அனைவருக்கும், நாட்டு மக்கள் மற்றும் உலகவாழ் மக்கள் அனைவரது நலனுக்காகவும், கொவிட் தொற்று முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டியும் இந்த விசேட ஒரு வார பிரித் பாராயண நிகழ்வு இடம்பெற்றதாக மிரிசவெட்டிய ரஜமஹா விகாராதிபதி கலாநிதி ஈதல்வெடுனுவெவே ஞானதிலக தேரர் தெரிவித்தார்.

ஒரு வார பிரித் பாரயண நிகழ்வின் ஏற்பாட்டிற்கு பிரதமர் அலுவலகம் அனுசரணை வழங்கியிருந்தது.

பிரதமர் ஊடக பிரிவு

1 comment:

  1. இது அரசியல் கலந்த சமய நிகழ்ச்சியா அல்லது சமயம் கலந்த அரசியல் நாடகமா என மக்கள் வினவுகின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.