Header Ads



அமைச்சரவை அதிகாரங்களுக்கு ஆசைப்படும் கப்ரால், பொருளாதாரத்தை மீட்டெடுக்க எவ்வளவு காலம் தேவை என கூற முடியாதாம்


சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் மத்திய வங்கி ஆளுனருக்கு அமைச்சரவை அமைச்சருக்கு நிகரான அதிகாரங்கள் வழங்கப்படுவதாக அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நல்ல அங்கீகாரம் இருப்பது சர்வதேசத்துடன் கடமையாற்றுவதற்கு உதவியாக அமையும் என குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி எனக்கும் அவ்வாறான ஓர் நல்ல நிலையை ஏற்படுத்திக் கொடுப்பார் என கருதுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

நாம் எமது வாழ்க்கையிலிருந்தும் ஓர் நாள் விடை பெற்றுச் செல்ல நேரிடும் எனவே இவ்வாறான பதவிகளின் நிலையான தன்மை குறித்து பேச வேண்டியதில்லை. நாட்டின் நிதி நிலையை ஸ்திரப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அழைப்பு விடுத்ததன் காரணமாக நான் இந்தப் பதவியை ஒரு மனதாக ஏற்றுக்கொண்டேன். எதிர்க்கட்சிகள் இந்த நியமனத்தை அரசியல் ரீதியானது என கூறுவது நியாயமானதே.

ஏனெனில் இனி மத்திய வங்கியில் மாற்றங்கள் நிகழும் என அவர்களுக்குத் தெரியும். நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுப்பதற்கு இவ்வளவு காலம் தேவை என சரியாக கூற முடியாது என தெரிவித்துள்ளார்.   

2 comments:

  1. இலங்கை பொருளாதாரத்தை மீட்க முடியாது.
    பாதி சீனா காலணியாகவும், மறு பாதி இந்தியாவின் மாணிலமாகவும் மாறுவது உறுதி. அதுதான் இலங்கை தீவுக்கு சிறந்த தீர்வு

    ReplyDelete
  2. பொருளாதாரத்தை மேன்படுத்துவது எப்படிப் போனாலும்,எஞ்சிய காலத்தில் கள்ளர் கூட்டத்துக்கு கறுப்புப்பணத்தை வௌ்ளையாக்கும் பணியையும், பிரதான இறக்குமதியாளர்களைப் பயன்படுத்தி உச்சகட்ட லஞ்சம் எடுக்கும் பணியையும் காத்திரமாகச் செய்வார் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.