Header Ads



அல்லாஹ்வுக்குப் பயந்து, அலி சப்ரி அவர்களே இறுதி முடிவை எடுங்கள் - சல்மா


- ஏ.பி.எம்.அஸ்ஹர் -

காதி நீதி மன்றத்தைக கலைப்பதானது  முஸ்லிம் பெண் சகோதரிகளைப் பொறுத்தவரை மிகவும் கொடுமையானது" என காத்தான்குடி  நகர சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.சல்மா தெரிவித்துள்ளார்.

அவர் நீதியமைச்சர் அலி சப்ரிக்கு இது தொடர்பில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்

அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இந்த அரசாங்கத்தின் முஸ்லிம் சமூகம் சார்பான ஒரே அமைச்சர் என்ற வகையில் நீதியமைச்சர் பதவியை அல்லாஹ்தஆலா உங்களுக்கு வழங்கியுள்ளான்.

அல்ஹம்துலில்லாஹ். 

அதேவேளை தாங்கள் உண்மையிலேயே சமூகம் சார்ந்து நீதியாக நடக்கின்றீர்களா? என்பதை இறைவன் பரிசோதித்துக் கொண்டிருக்கின்றான் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு ஆத்மீக, ஈமானிய ரீதியாக உணர்த்த விரும்புகின்றோம். 

கௌரவ அமைச்சர் அவர்களே! 

இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் டொனமூர், சோல்பரி ஆணைக்குழுக்களில் அன்றைய முஸ்லிம் முன்னோடிகளான எம்.சி . அப்துர்ரஹ்மான், கலாநிதி. ரீ.பி. ஜாயா, அறிஞர் சித்திலெப்பை, சேர். ராசிக் பரீட், ஜஸ்டிஸ். அக்பர் போன்ற உன்னத மனிதர்களின் அயராத முயற்சியில் கிடைத்த “முஸ்லிம் தனியார் சட்டம்” அதன் ஒரு பகுதியான MMDA இன்று, தேவையில்லை என்று வாதப் பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு   எடுப்பார் கைப்பிள்ளையான அவல நிலைக்கு வந்திருப்பதையிட்டு முஸ்லிம் சமூகம் மிகவும் வேதனைப்படுகின்றது. 

முன்னாள் நீதி அமைச்சர்களான கௌரவ ரவூப் ஹகீம், கௌரவ, திருமதி. அத்துகோறலே போன்றோர் காட்டாத முனைப்பையும், ஆர்வத்தையும் தாங்கள் MMDA விடயத்தில் காட்டி, அக்கறையோடு செயற்படும் விதத்தைப் பாராட்டும் அதே வேளை, இஸ்லாமிய மார்க்க, சிவில் நிறுவனங்களுடைய ஆலோசனைகளை கருத்தில் கொள்ளாமல் அமைச்சரவையில் தாங்கள் எடுத்த முடிவு ஒருதலைப்பட்சமானதும், முழு முஸ்லிம் சமூகத்தையும் கேவலப்படுத்துகின்ற செயற்பாடாகவும் கருதப்படுகின்றது என்பதை பல முஸ்லிம் அமைப்புக்கள் கவலையுடன் வெளியிட்டுள்ளன.

காதி நீதிமன்றங்கள் மறுசீரமைக்கபபடவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

அமைச்சரவையின் தீர்மானத்தின் படி காதி நீதி மன்றத்தைக கலைப்பதானது  எமது முஸ்லிம் பெண் சகோதரிகளைப் பொறுத்தவரை மிகவும் கொடுமையானது, சாத்தியமற்றது என்றே கூறவேண்டும்.

மாவட்ட நீதிமன்றங்களுக்கு தங்களது திருமண பிணக்குகளைக் கொண்டு செல்லும்போது பணத்தேவை, அலைச்சல், அவமானம், துஷ்பிரயோகம், கால தாமதம், உதவி இன்மை போன்ற பலவிதமான இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். இது எமது சமூகத்தில் பல சீர்கேடுகள் ஏற்படுவதற்கு ஏதுவாக அமையும். 

இந்த விடயத்தில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழிகாட்டி, இந்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வது உங்களது தலையாய கடமையாகும். இந்த வரலாற்றுத்தவறை நீங்கள் செய்ய மாட்டீர்கள், செய்யக்கூடாது என்பதே எங்களது பிரார்த்தனையாகும்.

தலையிடிக்கு தலையணையை மாற்றுவது சரியா? காலுக்கு அணியும் செருப்பு பொருத்தம் இல்லாவிட்டால் செருப்பை மாற்றுவதா? அல்லது காலை வெட்டி வீசுவதா? போன்ற வாதங்கள் தங்களை நோக்கி முன் வைக்கப்படுவதால் அல்லாஹ்வுக்குப் பயந்து இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்குமாறு மிகவும் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி

இவ்வண்ணம்,

எம்.எல்.ஏ.சல்மா 

நகரசபை உறுப்பினர்,

காத்தான்குடி.

4 comments:

  1. Ali Sabri is a mere puppet
    that dances according
    to the string puller .

    ReplyDelete
  2. Well said Sister Salma. Masha Allah.

    Here is hoping and praying that Minister Ali Sabry gives your words the seriousness they deserve and does Justice to his Job and the Muslim Community in Sri Lanka.

    ReplyDelete
  3. தேவைப்படும் மாற்றங்கள்: காதியார் நியமனத்துக்கான விண்ணப்பம் பத்திரிக்கையூடாக பகிரங்கமாக கோரப்படவேண்டும். காதியாரின் சேவைக்காலமும் அதி உச்ச சேவைக்காலமும் வரையறுக்கப்படவேண்டும். காதியாரின் சேவை பற்றிய தரக்கணிப்பு ( ) நீதியமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படவேண்டும். காதியாராக நியமிக்கப்படுவதற்கான குறைந்த கல்வித்தராதரம் வரையறுக்கப்படவேண்டும். காதியாருக்கு வழங்கப்படும் உத்தியோக நியமனப் பாத்திரம் காதியார் பணியகத்தின் காட்சிப்படுத்தப் பட வேண்டும். காதியாருக்கான பயிற்சி நெறியும் போட்டிப் பரீட்சையும் அறிமுகப்படுத்தப்படவேண்டும். மேல் முறையீட்டுக்கான வழிமுறைகள் வரையறுக்கப்பட்டு இலகு படுத்தப்படவேண்டும். அவ்வாறே தனது முறையீட்டை தனக்குப் பகரமாக வாதிடக்கூடிய அமைப்பு நிறுவப்படவேண்டும்.


    என்னதான் சொன்னாலும் இத்துணை காலமும், பட்டப்படிப்பு, முதுமாணி, முனைவர் எனப் பட்டம் சேர்த்த முஸ்லீம் மாணவர்களும், மாணவியர்களுக்கு இந்த காதி நீதி மன்றத்தை ஆய்வுக்குட்படுத்தாதை, அதற்கு வழிகாட்டத்தவறிய முஸ்லீம் புத்தி ஜீவிகளின் அறிவுத்தரத்தையும் சமூக ஈடுபாட்டையும் என்னவென்ருதான் சொல்வது..... எல்லாம் முடியப்போகும் போது மூக்கால் அழுகின்றவர்களுக்கு மாத்திரம் குறைவில்லை.

    ReplyDelete
  4. I am repeating a comment I made which is yet to be published

    Quote

    Sep. 19, 17.42 pm

    Well said Sister Salma. Masha Allah.

    Here is hoping and praying that Minister Ali Sabry gives your words the seriousness they deserve and does Justice to his Job and the Muslim Community in Sri Lanka.

    Unquote

    ReplyDelete

Powered by Blogger.