Header Ads



கர்ப்பம் தரிக்காதீர்கள் எனக்கூறியதால், கருவை கலைப்பதற்கு முயற்சிக்கும் பெண்கள் - மருத்துவர்கள் கவலை


கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் வரை கர்ப்பம் தரிப்பதனை ஒருவருடம் தாமதப்படுத்துமாறு அண்மையில் விசேட வைத்தியர் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையைத் தவறாகப் புரிந்துக் கொண்ட கர்ப்பிணி தாய்மார்கள் வயிற்றில் வளரும் கருவை கலைக்க வைத்தியர்களிடம்  வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்துள்ளனர் என  மருத்துவர்சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் பலர் தங்கள் வயிற்றில் வளரும் கருவை கலைக்க வைத்தியர்களிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் வரை கர்ப்பம் தரிப்பதனை ஒருவருடம் தாமதப்படுத்துமாறு அண்மையில் விசேட வைத்தியர் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையைத் தவறாகப் புரிந்துக் கொண்டமையின் காரணமாகக் கர்ப்பிணி தாய்மார்கள் வயிற்றில் வளரும் கருவை கலைக்க வைத்தியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்திற்கமைய தாயின் உயிருக்கு ஆபத்தாக இருந்தால் மாத்திரமே கரு கலைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உலகிற்கு வந்த புதிய நோயாகும். உலகம் முழுவதும் அதன் செயற்பாடு பற்றிய வரையறுக்கப்பட்ட தரவுகள் மாத்திரமே இன்னமும் உள்ளது. மேலும் ஒரு வருடத்திற்குள் விஞ்ஞானிகள் அதற்கு புதிய தடுப்பூசி அல்லது மருந்தை உருவாக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவருட கர்ப்பத்தைத் தாமதப்படுத்துவது தாய்க்கும் கருப்பையில் வளரும் குழந்தைக்கும் நன்மையை ஏற்படுத்தும் என நிபுணர் தனது தனிப்பட்ட கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் உடனடியாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் வயிற்றில் வளரும் குழந்தை அல்லது தாய் கொரோனா தொற்றினாலும் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக் கொள்ள முடியும் என மகளிர் வைத்திய நிபுணர் சனத் லெனரோல் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. கர்ப்பம் தரிப்பதை என்பதை கர்ப்பம் உண்டாக்குவது என சொல்லியிருந்தால் நல்லதாக இருந்திருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.