Header Ads



சர்வதேசம் எழுப்பும் கேள்விகளை மூடி மறைக்க முடியாது - குணவன்ச தேரர்


உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் தொடர்பில் தேசிய மட்டத்தில் எழும் அழுத்தங்களை மூடி மறைப்பதை போன்று சர்வதேசம் எழுப்பும் கேள்விகளை மூடி மறைக்க முடியாது என

தெரிவித்துள்ள எல்லே குணவன்ச தேரர், இது தொடர்பில் தெளிவாக விளக்கமளிக்க வேண்டிய

பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு என்றார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு

தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை கோரி நிற்கிறார்கள். இதனை தவறென்று குறிப்பிட முடியாது. இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

 குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும். என்பதையே அனைத்து தரப்பினரும் கோருகிறோம். தலதா மாளிகைக்கு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு இதுவரையில் நீதி கிடைக்கப் பெறவில்லை.

அதனைப் போன்று இந்த சம்பவத்தை மூடி மறைக்க கூடாது.உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

தொடர்பில் இதுவரையில் சிறந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை. உண்மையை

வெளிப்படுத்த தாமதிப்பது மர்றுப்பட்ட சந்தேகத்தை ஏற்படுத்தும். என்றார்.

No comments

Powered by Blogger.