September 20, 2021

உள்வீட்டு இரகசியங்களை, பகிரங்கப்படுத்துவது துரோகமாகும்


- அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் -

அல்­குர்­ஆனில் அல்லாஹ் சூரா மும்­த­ஹ­னாவின் ஆரம்ப வச­னங்­களில் மதீ­னாவில் இடம்­பெற்ற விரும்­பத்­த­காத சம்­பவம் ஒன்று பற்றி குறிப்­பி­டு­கிறான்.

ஹாதிப் இப்னு அபீ பல்­தஆ (ரழி) என்ற நபித்­தோழர் மக்­கா­வி­லி­ருந்து மதீனா வந்­தி­ருந்த ஒரு பெண்­ணு­டைய கையில் நபி­ய­வர்­க­ளு­டைய திட்­ட­மொன்று பற்­றிய தக­வலை உள்­ள­டக்­கிய கடிதம் ஒன்றை எழுதி மக்­கா­வா­சி­க­ளுக்கு கொடுக்கும் படி கொடுத்து அனுப்­பினார். அப்பெண் வழியில் போய்க் கொண்­டி­ருந்த போது அக்­க­டிதம் நபி­ய­வர்­களால் அனுப்­பப்­பட்ட சில நபித் தோழர்­களால் கைப்­பற்­றப்­பட்­டது. இந்த ஸஹா­பியின் நட­வ­டிக்­கையை அல்லாஹ் கடு­மை­யாக எச்­ச­ரித்தான்.

அல்­லாஹ்­வி­னதும் அவ­னது தூத­ரதும் எதி­ரி­களை நேசத்­துக்கும் விசு­வா­சத்­துக்கும் உரி­ய­வர்­க­ளாக எடுத்துக் கொள்­ளக்­கூ­டாது என்று அந்த சூராவின் ஆரம்ப வச­னங்கள் எச்­ச­ரிக்­கின்­றன. முஸ்­லிம்கள் நிரா­க­ரிப்­பா­ளர்­க­ளாக மாற வேண்டும் என்று அவர்கள் விரும்­பு­வ­தா­கவும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அவர்கள் போராடும் அதே நேரம் மோச­மான வார்த்­தை­களை பேசு­வ­தா­கவும் கூறு­கின்றான். அப்­ப­டி­யான நிரா­க­ரிப்­பா­ளர்­க­ளுக்கு முஸ்லிம் சமூ­கத்தின் தக­வல்­களை நகர்த்­து­வது பாரிய குற்றம் என்­பதை இந்த வச­னங்கள் உணர்த்­து­கின்­றன.

மதீ­னாவில் ரசூல் (ஸல்) அவர்கள் தனது சஹா­பாக்­க­ளுடன் இருந்த பொழுது பேசிக்­கொண்ட சில முக்­கி­ய­மான கருத்­துக்­களை ஒரு நபித்­தோழர் -தனது சில தனிப்­பட்ட இலா­பங்­க­ளுக்­காக – மக்­கா­வி­லுள்ள குறை­ஷி­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்தும் நோக்கில் மேற்­கொண்ட இந்த முயற்சி பயங்­க­ர­மான குற்றம் என்­பதை அல்லாஹ் சொல்லிக் காட்­டு­கிறான். இது ஒரு விரி­வான சம்­ப­வ­மாகும்.

எனவே மிகவும் பார­தூ­ர­மான, வெளிப்­ப­டுத்தக் கூடாது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருக்கும் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­து­வது மிகப் பெரிய துரோகம் மட்­டு­மல்ல பாவ­மாகும்.

இரு நபர்­க­ளுக்கு இடையில் இடம்­பெறும் உரை­யாடல், கணவன் மனை­விக்­கி­டை­யி­லான தாம்­பத்­திய உறவு, ஒரு கூட்­டத்தில் இடம்­பெறும் கலந்­து­ரை­யாடல் போன்ற இவை அனைத்தும் ரக­சி­ய­மாக தனிப்­பட்ட முறையில் பேணப்­பட வேண்­டிய தக­வல்­க­ளாகும். அவற்றை பாது­காக்­காமல் விடு­வது அல்­லது மற்­றொரு நப­ருக்கு சொல்­வது சமூ­கத்தில் பயங்­க­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் அதே நேரம் மனதில் கவ­லை­யையும் ஆத்­தி­ரத்­தையும் இனங்­க­ளுக்கும் தனி­ந­பர்­க­ளுக்கும் இடை­யி­லான உறவு விரி­சல்­க­ளையும் ஏற்­ப­டுத்தும்.

நபி(ஸல்) கூறி­னார்கள்:- “ஒருவர் இன்­னொ­ரு­வ­ரோடு ஒரு செய்­தியைப் பேசி­விட்டு திரும்பிப் பார்த்தால் அது அமானத் ஆகும்” (அபூ­தாவூத் – 4868)

இதற்கு இமாம் முனாவி (ரஹ்) விளக்­க­ம­ளிக்கும் போது: தக­வலைப் பகிர்ந்த அந்த நபர் அந்த மஜ்­லிஸில் இருந்து சென்­று­விட்­டாலோ அல்­லது வல­மா­கவோ இட­மா­கவோ திரும்பிப் பார்த்­தாலோ அவர் பேசிய விட­யங்­களை அவர் யாரோடு பேசி­னாரோ அவரைத் தவிர வேறு எவரும் தெரிந்­து­கொள்­ளா­தி­ருக்க வேண்டும் என்ற நோக்கில் இருக்­கிறார் என்­ப­தற்­கான அடை­யா­ளங்கள் அவ­ரி­ட­மி­ருந்து வெளிப்­பட்டால் அவர் பேசி­யவை அமா­னத்­தாகும். யாருடன் அவர் பேசி­னாரோ அவ­ரிடம் அதனை அடைக்­க­ல­மாக ஒப்­ப­டைத்­தி­ருக்­கிறார் என்­ப­தனால் வேறு எவ­ரு­டனும் அவர் அதனைப் பகிர்ந்து கொண்டால் அல்­லாஹ்வின் கட்­ட­ளைக்கு அவர் மாறு­செய்­த­வ­ராவார். தனக்கு தரப்­பட்ட அமா­னி­தத்தை பொருத்­த­மற்­ற­வ­ரிடம் கொடுத்­த­தாக அது அமையும். அநி­யா­யக்­கா­ரர்­களில் ஒரு­வ­ராக அவர் மாறு­கிறார். எனவே அதனை அவர் மறைக்க வேண்டும். அவர் திரும்பிப் பார்த்­ததன் மூலம் அதனை வேறு யாரு­டனும் பேச வேண்டாம் என அவரை வேண்­டிக்­கொண்­ட­தாக கருத வேண்டும்.

நபி­ய­வர்கள் சொற்­சு­ருக்­கத்­துடன் இங்கு கூறி­யுள்­ளார்கள். மனி­தர்­க­ளுடன் பழகும் முறைகள், நட்பின் ஒழுங்­குகள், இர­க­சி­யங்­களை மறைப்­பது, அன்பை பாது­காப்­பது போன்ற விட­யங்­க­ளையும் சகோ­த­ரர்­க­ளுக்­கி­டையே பகை­மையைத் தோற்­று­விக்கும் கோள் சொல்­வதை எச்­ச­ரிக்கும் வகை­யிலும் இந்த ஹதீஸ் அமைந்­துள்­ளது. (ஃபைளுல் கதீர் 1/325)

மேலும் நபி­களார் (ஸல்) அவர்கள்:- “மஜ்­லிஸ்கள் அமா­னி­தத்­தோடு கூடி­ய­வை­யாகும். (அங்கு பேசப்­படும் தக­வல்கள் வெளியே சொல்­லப்­படக் கூடா­தவை) ஆனால், மூன்று விவ­கா­ரங்கள் அங்கு பேசப்­ப­டு­மாக இருந்தால் அவற்றைத் தவிர.

அநி­யா­ய­மாக ஒரு­வரை கொலை செய்­வது பற்­றிய தகவல்

சட்­டத்­துக்கு புறம்­பாக உட­லு­றவு கொள்­வது பற்­றிய தகவல்

ஒரு­வ­ரது சொத்தை எவ்­வித உரி­மையும் இன்றி அப­க­ரித்துக் கொள்­வது பற்­றிய தகவல்(ஹதீஸ் ஹஸன்)

மேற்­படி நபி­மொ­ழிகள் பயங்­க­ர­மான குற்­றங்கள் தொடர்­பான தக­வல்கள் ஓரி­டத்தில் பகி­ரப்­ப­டு­மாயின் சமூ­கத்தின் நலன் கருதி அதனை அந்த சபைக்கு அப்பால் நகர்த்­து­வதில் தவறு கிடை­யாது என்­பதை நபி­ய­வர்கள் உணர்த்­து­கி­றார்கள். முதலில் அது பற்றி உரி­ய­வ­ருக்கு எச்­ச­ரித்த பின்­னரும் கூட அவர் அது விட­ய­மாக கவ­ன­மாக நடக்­காத போது இவ்­வாறு சபைக்கு வெளியே தேவைப்­படும் நபர்­க­ளோடு மாத்­திரம் அதனைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

இங்கு கூறப்­பட்­டுள்ள மூன்று விட­யங்­களும் சமூ­கத்தை அழிப்­ப­தா­கவும் அத்­து­மீ­ற­லா­கவும் அமை­வ­தனால் அது பற்றி மௌனம் சாதிக்க கூடாது என்­பதும் உணர்த்­தப்­ப­டு­கி­றது. ஆனால் ஒரு சபையில் மட்டும் உள்­ள­வர்­க­ளோடு தொடர்­பான, பாவ காரி­யங்­க­ளோடு சம்­பந்­தப்­ப­டாத தக­வல்கள் சபை­யோடு வரை­ய­றுக்­கப்­பட வேண்டும் என்­ப­தையும் அதற்­கப்பால் நகர்த்­து­வது மோச­மான துரோகம் என்­ப­தையும் இந்த ஹதீஸ் காட்­டு­கி­றது.

மேலும் ஒரு தடவை நபி­ய­வர்கள்: “ஒருவர் தனது மனை­வி­யோடு தாம்­பத்­திய உறவை மேற்­கொள்­கிறார். அவளும் அவ­ரோடு அவ்­வாறு ஈடு­பட்ட பின்னர் அவ­ளு­டைய ரக­சி­யத்தை வெளிப்­ப­டுத்­து­பவர் மறு­மையில் அல்­லாஹ்­வி­டத்தில் மிக மோச­மான அந்­தஸ்­துள்ள ஒரு மனிதர் ஆவார்” (ஸஹீஹ் முஸ்லிம்- 1437) எனக்­ கூ­றி­னார்கள்.

எனவே இஸ்­லாத்தில் உரை­யா­ட­லுக்கும், சபை நட­வ­டிக்­கை­க­ளுக்கும் மிக அழ­கான ஒழுக்­கங்கள் சொல்லித் தரப்­பட்­டுள்­ளன. சபையில் தனிப்­பட்ட முறையில் இரண்டு பேருக்கு இடையில் பேசப்­படும் தக­வல்கள் அதி முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­வை­யாக இருப்பின் அவற்றை அந்த வட்­டத்­துக்கு அப்பால் பகிர்­வது பல­வ­கை­யான பாத­க­மான, மோச­மான பின் விளை­வு­களை ஏற்­ப­டுத்தி, சமூக கட்டுக் கோப்­பையும் உடைத்­து­விடும்.

எனவே சபையின் இர­க­சி­யங்­களைப் பேணு­வது, தலை­மைக்கு கட்­டுப்­ப­டு­வது, நண்­பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையின் அந்­த­ரங்­கங்­களை பாது­காப்­பது என்பன இஸ்லாத்தின் அடிப்படையான போதனைகளாகும்.-Vidivelli

6 கருத்துரைகள்:

It is sad if any one corroborated to leak information. It is also very pathetic that these people don't know nothing is secret communicated via technology. So be careful at hereafter.

ATHUKKU EATHUKKKU GNAA SAARA PHOTO ?

YEN Sampnthamillama GNASARAYA photo? Eluthapatathu karanam? Ithuthan plans sabai
?

போடோக்கும் KATTURAIKKUM சம்பந்தம் இல்லை

Great advice to Black sheep in ACJU and in our community.

Post a Comment