Header Ads



நியூசிலாந்து நாட்டின் பிரதமரையும், அந்நாட்டின் மக்களையும் நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம் - ஜம்இய்யதுல் உலமா


நியூசிலாந்தின் ஓக்லாந்தில் நேற்று (03.09.2021) இடம்பெற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமது கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர், இலங்கையைச் சேர்ந்தவர் என்பதையும், அவரது மனிதாபிமானமற்ற செயலானது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத கொள்கையினால் உந்தப்பட்டது என்பதையும் ஊடகங்கள் வாயிலாக அறியக் கிடைத்து எமக்கு அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் இலங்கையிலுள்ள முஸ்லிம் சிவில் அமைப்புகள் இணைந்து, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத கொள்கையை கண்டித்தும் நிராகரித்தும் 2015 இல் 'கூட்டு பிரகடனம்' ஒன்றை வெளியிட்டன. இந்த ஐஎஸ்ஐஎஸ் கொள்கையானது சமாதானம், அன்பு, இரக்கம், நீதி, மிதமான போக்கு, அனைவரையும் மதித்தல் போன்றவற்றை ஊக்குவிக்கும் அழகிய இஸ்லாமிய மார்க்கத்தை திசை திருப்புவதாக அமைந்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள பல இளைஞர்கள் மாறுபட்ட தீவிரவாத கொள்கைகளின் பல வடிவங்களுக்கு இரையாகியுள்ளனர் என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும். எமது இளம் தலைமுறையினரைப் பாதுகாக்கவும் வழிகாட்டவும் அதிக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது.

'இத்தாக்குதல், ஒரு மதம், இனம் அல்லது கலாச்சாரத்தினால் அன்றி ஒரு தனிநபரால் மேற்கொள்ளப்பட்டது. இந்த செயல்களுக்கு அவர் மட்டுமே பொறுப்பாகிறார்' என நியூசிலாந்தின் பிரதமர் ஜெ. ஆர்டர்ன் வெளியிட்ட அறிக்கையை நாம் மிகவும் பாராட்டுகிறோம். இவை அன்பு, நீதி மற்றும் பாரபட்சமின்மையை ஊக்குவிக்கும் அற்புதமான தலைமைத்துவ பண்புகளாகும்.

புனித அல் குர்ஆனின், அத்தியாயம் 41 வசனம் 34 இல் கூறப்பட்டுள்ளபடி, சகிப்புத்தன்மை, இரக்கம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து நாட்டின் பொது மக்களையும் நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்.

'நன்மையும் தீமையும் சமமாக மாட்டாது, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! (அதாவது நம்பிக்கையுள்ள விசுவாசிகளை கோபத்தின் போது பொறுமையாக இருக்குமாறும், அவர்களை மோசமாக நடத்துபவர்களை மன்னிக்குமாறும்; அல்லாஹ் உத்தரவிடுகிறான்) அப்பொழுது, எவருக்கும் உமக்கும் இடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பர் போல் ஆகிவிடுவார்.'

இன்றைய உலகில் அமைதி, அன்பு, இரக்கம், நீதி, மிதமான போக்கு மற்றும் அனைவரையும் மதித்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் அனைத்து வகையான தீவிரவாதத்தையும் ஒழிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது நம் அனைவரதும் பொறுப்பாகும்.

இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களின் பாதுகாப்புக்காக நாம் பிரார்த்திக்கின்றோம். எல்லாம் வல்ல அல்லாஹ் அனைத்துவிதமான தீவிரவாத செயற்பாடுகளிலிருந்தும் மனிதர்களைப் பாதுகாத்து உலகில் அமைதியையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்துவானாக.


அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

7 comments:

  1. The Jamiyathul Ulema must stop making such opinions and statements which will have no bearing in the recognition of the Sri Lankan Muslims abroad for whatever it is worth. The Jamiyathul Ulema after having hoodwinked the Sri Lanka Muslim Community and being deceptive to it's own people and government is now attempting to hoodwink the international communmity too. The Jamiyathul Ulema must only concentrate of "RELIGIOUS" matters concerning the Sri Lankan Muslim community and educate all the Moulavi's and Ulema in their membership to practice the preachings of the Holy Quran" and the life of ouir Holy Prophet Mohamed (SAL). They should be "ONLY" forcused on these two important things and not get involved in local or international politics, Insha Allah.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart, Convener "The Muslim Voice" and Member "Viyathmaga".
    Tamil translation:
    ஜம்இய்யதுல் உலமாக்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை முஸ்லீம்களை மதிப்புமிக்கதாக அங்கீகரிப்பதில் எந்தப் பாதிப்பும் இல்லாத இத்தகைய கருத்துகளையும் அறிக்கைகளையும் கூறுவதை நிறுத்த வேண்டும். ஜம்இய்யதுல் உலமா ஸ்ரீலங்கா முஸ்லீம் சமூகத்தை ஏமாற்றி அதன் சொந்த மக்களையும், அரசாங்கத்தையும் ஏமாற்றிய பின்னர் இப்போது சர்வதேச சமூகத்தையும் கவர்ந்திழுக்க முயற்சிக்கிறது. ஜம்இய்யதுல் உலமா இலங்கை முஸ்லீம் சமூகத்தைப் பற்றிய "மத" விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் மற்றும் அனைத்து மouலவிகள் மற்றும் உலமாக்களுக்கும் புனித குர்ஆன் பிரசங்கங்களைப் பயிற்சி செய்ய உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இந்த இரண்டு முக்கியமான விஷயங்களில் "மட்டும்" கவனம் செலுத்துங்கள் மற்றும் உள்ளூர் அல்லது சர்வதேச அரசியலில் ஈடுபடாதீர்கள்.
    Researcher, SLFP/SLPP Stalwart, Convener "The Muslim Voice" and Member "Viyathmaga".

    ReplyDelete
  2. நியூஸிலாந்து பிரதமரைப் பாராட்டுவதால் பயங்கரவாதப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.அவனைப் போன்ற பல எண்ணற்ற சிந்தனையில் வழிகெட்டுப்போன பல வாலிபர்கள் நிச்சியம் இங்கு இருக்கலாம். அவர்களைச் சரியாக இனங்கண்டு அவர்களை நல்வழிப்படுத்தி சமூகத்துக்கும் நாட்டுக்கும் பிரயோசனமான மனிதர்களாக மாற்ற உடனடியாக திட்டம் போட்டுச் செயல்படுங்கள். அது சாதாரணவிடயமல்ல.நீங்கள் இன்னமும் பாராட்டிப் பாராட்டி கடமையைப் புறக்கணித்து வாழ்ந்தால் நிச்சியம் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை பொறுப்புள்ளவர்கள் நினையில் இருத்திக் கொள்ள வேணடும்.

    ReplyDelete
  3. ஏன் இப்படி பதிவிட்டீர்

    ReplyDelete
  4. இறுக்கமான மனநிலை கொண்டவர்கள் மார்க்கத்திற்குள் மறைந்து கொண்டு சுற்றுகின்றனர். மனப்பிறழ்வானது மார்க்கத்தை அச்சொட்டாக பின்பற்றுவது போன்று காட்சி தருவதால் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப் படுவதுமில்லை என்பதே ஆபத்தானது. செயற்கையாகக் கட்டமைக்கப்பட்ட மார்க்க கலாசாரம் கொண்ட பிரதேசமே குற்றவாளி வசித்த பிரதேசம். செயற்கையான கட்டுப்பாடுகள் மனப்பிறழ்வை ஏற்படுத்தும்.

    ReplyDelete
  5. அரசியல் தாளத்துக்கு வாத்தியம் முழக்கும் சோனக இயக்கங்களும் இணையத்தளங்களும், அவற்றுக்கு மிக விரைவில் என்ன நடைபெறும் என்பதை தயவு செய்து பொறுத்திருந்து பாருங்கள். பொதுவாக நாம் இந்த நாட்டில் முஸ்லிம்கள் எதிர்காலத்திலும் இந்த நாட்டில் வாழ வேண்டும் அதற்கான அடித்தளங்களை நாம் ஆலோசனையாகக் கூறுகின்றோம்.ஆனால் அல்குர்ஆன் கூறுவதுபோல கண்ணிருந்தும் பார்க்க இயலாத, காதிருந்தும் செவிசாய்க்க முடியாத உள்ளமிருந்தும் சிந்திக்கத் தெரியாக கால்நடைகளைவிடவும் கேவலம் கெட்ட படைப்பாக இந்த முஸ்லிம் சமூகம் எனப்படும் சோனக சமூகம் அங்குமிங்கும் நடமாடுகின்றது.

    ReplyDelete
  6. எம்மத்தியில் உள்ள மத தீவிரவாதிகளை இனம் காண ஜம்யத்துல் உலமா சபை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.