Header Ads



நாட்டில் உணவு பற்றாக்குறைக்கு சாத்தியம் இல்லை – அரசாங்கம் உறுதியான நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அறிவிப்பு


இலங்கையில் உணவு பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் இல்லை என நிதி, மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

இலங்கை அரசாங்கம் இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனி போன்ற பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள போதிலும், அதில் இருந்து மீள்வதற்கு ஏற்றவகையில் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

அத்துடன், 2.8 பில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்திருந்த வெளிநாட்டு கையிருப்பானது தற்போது 3.8 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார். 

அதேவேளை, அல்-ஜசீரா கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தற்காலிக செயல்பாடாகவே அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

இவ்வாறானான செயற்பாடுகள் வெளிநாட்டு கையிருப்பினை மேம்படுத்துவதற்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை என கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

2 comments:

  1. அஜித் கப்ரால் என்பவர் மாபெரும் பொய்காரன். அவர் பேச்சை நம்பினால் மண்குதிரையை நம்பி கடலில் இறங்கிய கதைதான்.

    ReplyDelete
  2. அஜித் கப்ரால் என்பவர் மாபெரும் பொய்காரன். அவர் பேச்சை நம்பினால் மண்குதிரையை நம்பி கடலில் இறங்கிய கதைதான்.

    ReplyDelete

Powered by Blogger.