Header Ads



ஹரீன், வடிவேல் மீதிருந்த நீதிமன்ற தடையுத்தரவு நீக்கம்


இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் என்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் அதன் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஆகியோரின் செயற்பாடுகளை தடுக்கும் வகையில் மேல்மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட தடையுத்தரவை இன்று (16.09.2021) அதே நீதிமன்றத்தினால் இரத்துச் செய்யப்பட்டது.

அண்மைய தினத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க மற்றும் ஆர். யோகராஜன் ஆகியோர் சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி மனு ஒன்றை தாக்கல் செய்து 2021.08.16 அன்று வழங்கப்படட்ட தற்காலிக தடையுத்தரவை இரத்துச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஹரீன் பெர்னாண்டோ மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோருக்கு தடைகள் எதுவும் இன்றி இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும் என சிவில் மேன்முறையீட்டு நிதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

அதற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டைத் தொடர்ந்து கடந்த 06 ஆம் விடுக்கப்பட்ட தடையுத்தரவை ஆட்சேபித்து ஹரீன் பெர்னாண்டோ மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் சமர்பித்த மேன்முறையீட்டை கவனத்திற்கொண்ட நீதிமன்றம் இன்று இந்த தீப்பை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கை தோட்டதொழிலாளர் சங்கத்தின் தலைவராக ஹரீன் பெர்னாண்டோ அவர்களுக்கும் செயலாளராக வடிவேல் சுரேஷ் அவர்களுக்கும் செயற்பட முடியும். 

மனுதாரர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காஸிம் அவர்களுடன் சட்டத்தரணிகளான சாருக ஜயரட்ன, புத்திக சிறிவர்தன ஆகியோர் ஆஜராகியிருந்தனர். 

வடிவேல் சுரேஷ் (பா.உ)

பொதுச் செயலாளர் 

இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம்.

No comments

Powered by Blogger.