Header Ads



கொவிட் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்ய முடி­யாமற் போகுமோ எனப் பயப்­ப­டா­தீர்கள் - நசீர் அஹமட்


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

‘ஓட்­ட­மா­வடி மஜ்மா நகரில் கொவிட் 19 ஜனா­ஸாக்­களை தொடர்ந்தும் நல்­ல­டக்கம் செய்­வதில் எவ்­வித பிரச்­சி­னை­யு­மில்லை. மைய­வா­டிக்கு தேவை­யான காணி­யினை நான் பெற்றுக் கொடுத்­துள்ளேன். நான் அபி­வி­ருத்தி குழுவின் தலை­வ­ராக இருக்கும் வரை மைய­வா­டிக்கு தேவை­யான காணி­களை தொடர்ந்தும் பெற்றுக் கொள்ள நட­வ­டிக்கை எடுப்பேன் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நசீர் அஹமட் தெரி­வித்தார்.

ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் கொவிட் 19 மைய­வாடி தொடர்பில் விளக்­கங்கள் கோரிய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் மைய­வா­டியின் பாதை உட்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளுக்­காக அர­சாங்கம் 68 மில்­லியன் ரூபாவை ஒதுக்­கி­யுள்­ளது. இதற்கு நிதி­ய­மைச்சர் பஷில் ராஜ­பக்ஷ அனு­மதி வழங்­கி­யுள்ளார். விரைவில் பாதை உட்­கட்­ட­மைப்பு பணிகள் ஆரம்­பிக்­கப்­படும்.

புதி­தாக மைய­வா­டிகள் இனங்­கா­ணப்­பட்டால் அதற்­கான உட்­கட்­ட­மைப்பு வச­திகள் பாதை வச­தி­களை அமைப்­ப­தற்கு அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து நிதி­யினைப் பெற்­றுக்­கொள்ள முடியும். அந்த வகையில் ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் மைய­வா­டிக்­கான பாதை உட்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளுக்கு 68 மில்­லியன் ரூபா அர­சாங்­கத்­தினால் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

கொவிட் 19 ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்­கான காணி­களை பெற்றுக் கொடுப்­பது எனது பொறுப்­பாகும். அதனால் மக்கள் இது தொடர்பில் கவலை கொள்ளத் தேவை­யில்லை. ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்ய முடி­யாமற் போகுமோ எனப் பயப்­ப­டா­தீர்கள். அல்­லாஹ்வின் உத­வி­யினால் நான் அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் மேற்கொள்வேன்’ என்றார்.-Vidivelli

2 comments:

  1. You want to keep the Maiyawadi for the Corona victims exclusively in Ottomawadi, right? What a STUPID idea.

    1. Do you realise the Indescribable Suffering and Grave Inconvenience
    suffered by Muslims living in other parts of the country in the
    South, West, North West etc. in having to travel all the way to the
    East to bury their near and dear ones?

    2. If you REALLY want to help the Grieving Family in particular and the
    Muslims in General, you should use your expertise to find places for
    Burial in ALL areas where Muslims live.

    3. Don't forget, it is NOT your job to find a place for Burial but it
    is the Govt's job. If you are so clever and efficient, Why don't you
    get the Govt. to find these places in all parts of the country where
    Muslims live?

    4. Even better, why don't you and your fellow MPs who voted for 20A get
    the Govt, to permit Burial without any restrictions on Baseless
    grounds like water pollution. Remember, there are 190 countries in
    the world which permit Burial without any restrictions like in this
    country.

    ReplyDelete
  2. 20 சட்டத்திருத்தத்துக்கு கைதூக்கி அதனைச் சட்டமாக்க துணைபோன துழுக்கன்களை முதலில் ஊத்தை வாழியில் அடக்கம் செய்ய வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.