Header Ads



இளைஞர்கள் கொவிட் தடுப்பூசியைப் பெற வேண்டும், இது மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உதவும் - அமைச்சர் நாமல்


இளைஞர்கள்  தடுப்பூசி மையங்களுக்குச் சென்று கொவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி போடுவது பெற்றோர்கள், பெரியவர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என சுகாதார பிரிவு நம்புகிறது, இது அரசியல் கருத்து அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி போடுவது பரவுவதைத் தடுக்க எளிதான மற்றும் மிகவும் பொருத்தமான வழி என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய போக்குகளின் அடிப்படையில் மூன்றாவது டோஸ் வழங்கப்படுமா இல்லையா என்பதை சுகாதார அதிகாரிகள் தீர்மானிக்க வேண்டும்.

வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பல நாடுகள் முடக்கலை விதித்ததாக அமைச்சர் தெரிவித்தார. ஆனால் அது பயனற்றது என்று இப்போது தெரிவிக்கப்படுகிறது, மேலும் மக்கள் வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

நாட்டை மேம்படுத்தவும், தடுப்பூசி போடுவதன் மூலம் மக்களைப் பாதுகாக்கவும் இளைஞர்கள் ஏற்கனவே முன் வந்துள்ளதாகவும், ஏனையவர்களும் இதைச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

No comments

Powered by Blogger.