Header Ads



சட்டவிரோதமாக அகற்றப்படும் பொருட்கள், கொள்வனவு தொடர்பான அழுத்தம் - பதவி விலகும் நுகர்வோர் அதிகார பணிப்பாளர்


நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் துஷான் குணவர்தன தமது பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.

தமது பதவி விலகல் கடிதத்தை நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்னவுக்கு அடுத்த வாரம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பொருட்கள் கொள்வனவு செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அழுத்தம் பிரயோகித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இரண்டு வெள்ளை பூண்டு கொள்கலன்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டமை உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பில் தமக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக அவர் எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

சீனி உள்ளிட்ட பல நுகர்வு பொருட்கள் சட்டவிரோதமாக வெவ்வேறு முறைகளில் வெளியேற்றப்படுவதாகவும் நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் துஷான் குணவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.

சதொச ஊடாக கொண்டு வரப்பட்ட வெள்ளைப்பூண்டு தொகை வேறு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டு அவை மீள சதொசவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.