Header Ads



பிரதமரும், பீரிஸும் இத்தாலிக்கு பறக்கிறார்கள்


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் எதிர்வரும் 09ஆம் திகதி இத்தாலிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாலியில் அடுத்த வார இறுதியில் நடக்கவுள்ள ஐரோப்பிய மாநாடொன்றில் கலந்துகொள்ள பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டின் ஆரம்ப உரையை ஆற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

2 comments:

  1. கூட்டம் முடிந்து மாலையில் இத்தாலி பிரதமரைச் சந்தித்து ஓரிண்டு டிரில்லியன் யூரோக்கள் கடன் வாங்கினால் பொருளாதாரத்தைச் சரிபடுத்தலாம். ஆனால் பணம் இங்குவந்த உடன் அது பெருஞ்சாலி எலிகளிடம் போகாமல் யாரால் பாதுகாக்க முடியும். அதுதான் பெரிய பிரச்சினை.

    ReplyDelete
  2. இரண்டு வயதுமுதிர்ந்த நோயாளர்கள் வௌிநாடு சென்று நாட்டுக்கு என்ன நன்மையைக் கொண்டுவர முடியும். எஞ்சுவது நாட்டு மக்களின் வரிப்பணம் ஒரு கோடிக்கு மேல் வீணாகச் செலவாகுவது மட்டும்தான்.

    ReplyDelete

Powered by Blogger.