Header Ads



நீங்கள் ஏன், முஸ்லீம் ஆகக்கூடாது..?


- பாரூக் -

அறிஞர் அண்ணா வாழ்க்கையில்..

தஞ்சை மாவட்டத்தில் ஓர் நண்பர் அவரது பெயர் கபீர் உன்னிசா.

நீங்கள் இவ்வளவு நன்றாக முகமது நபியையும். இஸ்லாமியக் கோட்பாடுகளையும் பற்றி பேசுகிறீர்களே; நீங்கள் ஏன் இஸ்லாமிய மதத்தில் சேர்ந்து விடக்கூடாது? என்று அண்ணா அவர்களை கேட்டார்கள்.

அவர்களுக்கு அண்ணா அளித்த பதில் இதுதான்: 

"இஸ்லாத்தில் மார்க்க கட்டளை என்றும், திட்டங்கள் என்றும் சில உண்டு. இஸ்லாமிய சமுதாய அமைப்புக்கு 'ஜமாத்' என்று பெயர். 

இஸ்லாமிய கோட்பாடுகளை - மார்க்கத் துறையை ஏற்று, அதிலே தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் ஏக தெய்வம் என்ற கொள்கை உடையவர்களாக இருக்க வேண்டும். 

ஆண்டவனுக்கு உருவம் கொடுத்து, அதற்குப் பூசை செய்து பிறரை ஏமாற்றும் எண்ணம் கூடாது. அந்த வகையிலே பார்த்தாலே நான் இஸ்லாமியன் தான். ஆனால் இஸ்லாமிய 'ஜமாத்' திலே நான் இல்லை.

நான் இஸ்லாத்திலே சேர்ந்து அதன் பிறகு பாராட்டுவதிலே அருமை பெருமையில்லை. என்வீடு மிக நல்லவீடு என்று நானே எடுத்துச் சொல்வது எப்படி சரியில்லையோ, அதைப்போலத்தான் அது அமையும். என் வீட்டைப்பற்றி நான் பெருமைப் படுவதிலே ஆச்சர்யமில்லை. 'ஜமாத்'திலே சேராமலே இஸ்லாத்தின் நன்மைகளை எடுத்துச் சொல்வது தான் பெருமை.

எச்.ஜி.வெல்ஸ். ஜார்ஜ் பெர்னாட்ஷா, காந்தி போன்ற பெரியார்கள் முகம்மது நபியைப்பற்றி கூறியுள்ளார்கள். அந்தப் பெரியார்களெல்லாம் இஸ்லாமியர் அல்லாதவர்களானதால்தான் அவர்கள் பாராட்டியதிலே பெருமை இருக்கிறது.

 எனவே ஆயிரத்தோடு ஆயிரத்தொன்று என்று என்னையும் இஸ்லாமியனாக்குவதிலே பெருமையில்லை '' என்றார்.!

-அறிஞர் அண்ணாவின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் புத்தகத்தில் இருந்து.

1 comment:

  1. அல்லாஹ் தன் உண்னதமான திருமறையான குர்ஆனின் பலஇடங்களில் யார் யாருக்கு சுவர்க்கம் கிடைக்கும் என்று மிகத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான். அவரகளுக்குத்தான் சுவர்க்கம் கிடைக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.