Header Ads



மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நீதிமன்றம் அழைப்பாணை


மட்டக்களப்பு மாநகர முதல்வர் T.சரவணபவன் அவர்களினால் மாநகர ஆணையாளர் M.தயாபரன் அவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு மாகாண மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை (Writ) வழக்கில் 01.04.2021ஆம் திகதி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட கட்டளையை, மாநகர ஆணையாளர் பல சந்தர்ப்பங்களில் மீறுகின்ற விதத்தில் செயற்பட்டமையினால் இச்செயற்பாடானது நீதிமன்றத்தினை அவமதிப்பமாகத் தெரிவித்து மாநகர முதல்வரினால், ஆணையாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கானது கடந்த மாதம் 19ஆம் திகதி ஆதரிப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது மாநகர முதல்வர் சார்ப்பில் தோன்றிய சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி U.L. அலி சக்கி, சட்டத்தரணிகளான A.L.ஆஸாத் மற்றும் N.கமலதாசன் ஆகியோரால் செய்யப்பட்ட சமர்ப்பணங்களின் அடிப்படையில் மாநகர ஆணையாளரை 13.09.2021ஆம் திகதி மன்றில் தோன்றுமாறு அழைப்பாணை அனுப்ப மாகாண மேல் நீதிமன்றம் கட்டளையாக்கிருந்தது. 

குறித்த நீதிமன்ற அழைப்பாணையை மாநர ஆணையாளரிடம் சேர்ப்பிப்பதற்காக நீதிமன்ற பிஸ்கால் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. 

குறித்த வழக்கானது நகர்த்தல் பத்திரம் மூலம் இன்று (15) அழைக்கப்பட்ட போது, மாநகர முதல்வர் சார்ப்பில் தோன்றிய சட்டத்தரணி A.L.ஆஸாத் அவர்களால் செய்யப்பட்ட சமர்ப்பணங்களின் அடிப்படையில் மாநகர ஆணையாளரை 23.09.2021ஆம் திகதி மன்றில் தோன்றுமாறு பிஸ்காலூடாகவும், பொலிஸாரூடாகவும் மீண்டும் அழைப்பாணை அனுப்ப மேல் நீதிமன்றம் கட்டளையாக்கியுள்ளது.

1 comment:

  1. இவருடைய முகத்தைப் பார்த்தால் 4வருடங்கள் சிறைசெல்லத் தகுதியானவர் போல் தான்தெரிகிறது.

    ReplyDelete

Powered by Blogger.