Header Ads



நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு உதவி


- Ismathul Rahuman -

நீர்கொழும்பு, பெரியமுல்லை முஸ்லிம் ஜனாஸா நலன்புரி சங்கம், போரதொட்ட முஸ்லிம் ஜனாஸா நலன்புரி சங்கம் ஆகியன இணைந்து நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறைக்குச் செல்லும் வீதிக்கு கொங்ரீட் போட்டுபுணரமைத்துக்  கொடுக்கின்றனர். 

சுமார் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் 5500 சதுரஅடி பரப்பளவுக்கு இக்கொங்ரீட் போடப்படுகின்றன. வைத்தியசாலை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இரு ஜனாஸா சங்கங்கழும் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். இவர்கள் பிரேத அறைக்கு பிரேதங்களை எடுத்துச் செல்லும் தல்லுவண்டிகள் உடைந்துள்ளதை சுட்டிக்காட்டியபோது அவ்வாறு உடைந்த 10 தல்லு வண்டிகளையும் சீர் திருத்திக் கொடுத்துள்ளார்கள். முஸ்லிம் சமூகத்தின் இவ்உதவியை வைத்திய சாலை முகாமைத்துவம் பாராட்டியுள்ளது.


No comments

Powered by Blogger.